உப்பு
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உப்பு

நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்  மத். 5:13  


 உப்பு எல்லா உணவுப் பொருட்களிலும் பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. எந்த பொருளும் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. சில நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. 

கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் உப்பைப் போல பயனுடைய சாட்சியாய் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஓர் உப்புக்கல். இதனால் அவன் தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பயனுள்ளவனாக வேண்டும். கிறிஸ்தவனை வழிநடத்துபவை வேத வசனங்கள். அவனுடைய வாழ்க்கை மற்றவர்களுக்குப் போதனை தருவதாக இருக்க வேண்டும். 

பிரியமானவர்களே,  நாம் உப்பாக இருக்கிறோமா? நம்மை சூழ்ந்து இருப்போருக்கு நம்மால் நன்மைகள் உண்டா?  நம்முடைய பேச்சும், வாழ்க்கையும், தேவனுடைய சாரத்தைப் பெற்று எழுப்புதலோடும், கிருபையோடும் எல்லாரையும் சந்திக்கிறதா? நாம் எல்லாருக்கும் பயன்படும் பாத்திரமாக இருக்கிறோமா?  நம்முடைய நடத்தையால், உலகத்தார் நலமானவைகளைத் தெரிந்து கொண்டு, மெய்யான தேவன் யார் என்று புரிந்து கொள்ளுகிறார்களா? சிந்திப்போம். 

தேவனுடைய திட்டத்தின் படி ஒருவர் உப்பாக வாழ்வாரானால் மற்றவர்களுக்கு நன்மையை மட்டும் தான் செய்வார்.  

இயேசு எனக்காய் மரித்தார் என்னில் சாரம் ஊட்டினார் சாரம் உள்ள உப்பைப்போல் என்றும் வாழ்வேன், அவருக்காய். சாரம் உள்ள உப்பாயிருபோம், சாரமுள்ள கிறிஸ்துவேடு வாழ்வோம். ஆமென். 





  :   52 Likes

  :   127 Views