உன்னதப்பாட்டு 8 : 4
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 8 : 4

"எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.”

முந்தின வசனத்தில் நம்மை அணைத்துக்கொண்ட இயேசு கிறிஸ்து, இந்த வசனத்தில் பாதுகாத்துக் கொள்வதை பார்க்க முடியும். உன் 2 : 2 -இல் எனக்குப் பிரியமானவள் இருக்கிறாள் என்று இயேசுகிறிஸ்து சொல்லியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து சொல்லுகிறதாவது, (எருசலேமின் குமாரத்திகள்  என்பது பழைய ஏற்பாட்டில் யூதர்களை குறிக்கும். புதிய ஏற்பாட்டில் எல்லா கிறிஸ்தவர்களையும் குறிக்கும்.) நீங்கள் என் மணவாட்டியைக் குழப்பாமலும், மணவாட்டிக்குத் தொந்தரவு கொடுக்காமலும் இருங்கள் என்பதாக அமைகின்றது (கலாத்தியார் 4: 29).

மணவாளன்  வருகைக்கு ஆயத்தம் பண்ண விடாதபடிக்கு பல்வேறு விதமான கள்ள போதனைகளையும், உபதேசங்களையும் கொண்டுவந்து மணவாட்டியாக தங்களை ஆயத்தம் பண்ணுகிறவர்களை, புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடிய சில எருசலேமின் குமாரத்திகள் கலங்க பண்ணுகிறார்கள் (2 பேதுரு  2:1). அதாவது அவர்களை சத்தியத்தில் வளர முடியாத படிக்கு தடை பண்ணுகிற ஒரு கள்ளப் போதனை உள்ள கிறிஸ்தவ கூட்டம், அவர்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து எச்சரிக்கிறது தான் இந்த வசனம். தனது சொந்த ஜனங்களை அதாவது அவரை ஏற்றுக்கொண்ட ஜனங்களை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை 1சாமு 12 : 22 -இல் பார்க்கிறோம். "கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்." 

இயேசு கிறிஸ்து எல்லாச் சூழலிலும் நம்மைக் காத்துக்கொண்டிருக்கிறார்.                                

குறிப்பு வசனம்:  உன் 2 :7, உன் 8 : 4




  :   26 Likes

  :   83 Views