உன்னதப்பாட்டு 8 : 13
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 8 : 13

"தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.”

தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோட்டத்தில் வாசம் பண்ணுகிறவள் என்பது பொதுவான சபையை (கிறிஸ்தவர்களை) குறிக்கும். என்னுடைய தோட்டத்தில் வாசம் பண்ணுகிற என் சபையே, என் கிருபையின் காலத்தில் வாழந்துக் கொண்டிருக்கிற என் மணவாட்டியே நீ என்னிடம் எல்லா உரிமையும் பெற்றிருக்கிறாய் என்று மணவாளகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார். 

தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; தோழர் என்பது இஸ்ரவேலரை குறிக்கும். அதாவது கிறிஸ்துவின் மரணத்திற்கு முன்பாக அவரை விசுவாசித்தவர்கள் (எடுத்துக்காட்டு யோவான்), யோவான் 3 : 29 -ல் யோவான் தன்னை கிறிஸ்துவின் தோழர் என்று குறிப்பிடுவதைப் பார்க்கலாம்.  இயேசு கிறிஸ்து கூறுகிறார், தோழர்கள் உன் சத்தத்தை இப்பொழுது கேட்கிறார்கள். அதாவது யூதர்களானாலும் சரி புறஜாதிகளானாலும் சரி, தோட்டத்தில் வாசம் செய்கிற சபையாக ஸ்திரியின்  சத்தம் கேட்கட்டும் என்று மணவாளகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

நானும் அதைக் கேட்கட்டும்.  இயேசு கிறிஸ்து தோழரோடு கூட, நானும் உங்கள் சத்தத்தைக் கேட்கட்டும் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். நாங்கள் தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். அதற்கு தேவனே சாட்சி என்று 1 தெசலோனி 2:4,5 இல் பவுல் குறிப்பிடுகிறார். அப்படியானால் கிறிஸ்து கேட்டு சாட்சி கொடுக்க வேண்டும். என்ன சாட்சி?  நல்லது உண்மையும் உத்தமும் உள்ள ஊழியக்காரனே என்று கூறுவார்.

இன்று உங்கள் சத்தத்தை மணவாளனகிய கிறிஸ்து கேட்கிறாரா?

குறிப்பு வசனம்: ஏசா 30 : 19, நியா 14 : 11, யோவான் 10 : 3, 27




  :   28 Likes

  :   90 Views