உன்னதப்பாட்டு 8 : 12
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 8 : 12

"என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.”

"சாலொமோனே!“  என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும்.  இந்த வசனத்தில் பிதா இயேசு கிறிஸ்துவைப் பார்த்துக் கூறுகிறதாவது, என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது. சபையாகிய தோட்டத்தை, என்னுடைய சத்திய வசனத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கியிருக்கிறேன் என்று  (யோவான் 17 : 17) ,ல் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் பிதா தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பார்த்துக் கூறுகிறார், என் திராட்சத்தோட்டத்தின் பலன், கனி எல்லாம் உம்மால் (இயேசு கிறிஸ்து) உண்டாயிற்று. எப்படியெனில், யோவான் 17 : 8 -ல் இயேசு கிறிஸ்து பிதாவைப் பார்த்துச் சொல்லுகிறதாவது, நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் சபைக்குக் கொடுத்தேன் என்றுக் கூறுகிறார். அதினால் கனி கொடுக்கிறவர்களாக மாறியிருக்கிறார்கள். எனவே பிதா இயேசு கிறிஸ்துவைப் பார்த்துக் கூறுகிறதாவது, தோட்டத்தின் பலனெல்லாம் அதாவது, கனிகளெல்லாம் உமக்குத் தான், அதேவேளையில் கனியைக் காக்கிறவர்களாகிய ஊழியர்களையும் மறக்கமாட்டேன் என்பதாகச் சொல்கிறார். கர்த்தருடைய பார்வையில் ஊழியர்களுக்கு விசேஷ கனம் உண்டு, இயேசு கிறிஸ்துச் சொல்கிறார் ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் பிதாவானவர் அவனைக் கனம் பண்ணுவார் என்று (யோவான் 12 : 26) -ல் பார்க்கிறோம். இந்த வசனத்தின்படி இங்கே ஊழியர்கள் கனப்படுத்தப்படுகிறார்கள்.

அன்பானவர்களே! நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை, கிறிஸ்துவின் ஊழியத்தை உங்கள் தாலந்திற்கேற்ப செய்யுங்கள். பிதாவினால் கனப்படுத்தப் படுவீர்கள்.

 நீங்கள் கனிகொடுக்கிற வாழ்க்கை வாழ்கிறீர்களா?

குறிப்பு வசனம்: நீதி 4 : 23, 1 கொரி 6 : 20




  :   31 Likes

  :   86 Views