உன்னதப்பாட்டு 8 : 10
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 8 : 10

"நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்;; அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்.”

நான் மதில்தான்-  இது முந்தின வசனத்தின் தொடர்ச்சி, இப்பொழுது சபையில் இருந்தும் இரட்சிக்கப் படாதவர்கள் பேசுகிறார்கள், நாங்கள் மதில் தான்.  எங்களுக்கு இரட்சிப்பு இயேசு கிறிஸ்து கொடுத்திருக்கிறார்.

"என் ஸ்தனங்கள் கோபுரங்கள்”  ஸ்தனம் என்பது மார்பை குறிக்கும். ஏசா 66 : 12 -ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின் படி கர்த்தரால் போஷிக்கப்படுதல், தேற்றப்படுதலைக் குறிக்கும். மேலும் ஆவிக்குரிய அர்த்தத்தில் அன்பு, விசுவாசத்தைக் (1 தெச 5 : 8) குறிக்கும். அவர்கள் சொல்லுகிறதாவது, நாங்கள் நன்றாகப் போஷிக்கப்படுகிறோம், தேற்றப்படுகிறோம். மேலும் எங்களிடம் அன்பும், விசுவாசமும் கோபுரம் போல் உயர்ந்துக் காணப்படுகிறது.

"அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்” நாங்கள் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் (எபே. 2 : 8). அவருடைய கண்களில் எங்களுக்கு தயவு கிடைத்தது. நாங்களும் உங்களைப் போல அவருடைய சொந்தப் ஜனங்கள்; (மணவாட்டி) என்று தைரியமாக சொல்கிறார்கள். அவருடைய கிருபையைப் பெற்றதினால் அவர்கள் மகிழ்ச்சியோடு கூறுகிறது என்னவென்றால், இன்று நாங்கள் இயேசு கிறிஸ்துவினால் கடாட்சம் பெற்றிருக்கிறோம்.  

இது மணவாட்டி ஆயத்தத்திற்கான  காலமாக இருப்பதால், அநேக பேர் சபையில் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து,  மனந்திரும்பி அவருடைய மணவாட்டி தகுதியை பெறுகிறதை  இந்த வசனம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது. எசேக்கியேல் 38 : 7 இல் "நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து;   நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு." இன்று சொல்லப்பட்டிருப்பது போல, முதலாவது நாம் கிறிஸ்துவுக்குள் எப்போதும் மணவாட்டிக்கான ஆயத்தமாக இருந்து, மற்றவர்களை கிறிஸ்துவின் மணவாட்டி தகுதிக்கு ஆயத்தப்படுத்தி, ஒரு நல்ல காவலாளனாயிருக்க, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார்.

நீங்கள் கிறிஸ்துவின் கிருபையை அனுதினமும் உணர்கிறீர்களா?

குறிப்பு வசனம்: வெளி 21 : 10-21, எசே 16 : 7




  :   24 Likes

  :   102 Views