உன்னதப்பாட்டு 7 : 6
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 7 : 6

"மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள். ”

இயேசு கிறிஸ்துவிற்கு மனமகிழ்ச்சியை உண்டாக்குவது அவருடைய சபையாகிய நாம் தான். ஏசா 5 : 7 -ல் "சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே” என்று சபையினுடைய ஒவ்வொரு சிறப்பு அம்சங்களையும் விவரித்து அதில் மகிழ்ச்சியாய் சொல்லி இருக்கிறார். மேலும் கர்த்தர் தனது ஜனங்களுக்கு நன்மை செய்வதில் சந்தோஷமாக இருக்கிறார் (எரே 32 : 40, 41). அதேபோல் தனது ஜனங்களின் ஆக்கினைகளை அகற்றிப் போட்டு, தனது ஜனங்கள் இரட்சிக்கப்படும் போது சந்தோஷமாய் இருப்பார் (செப் 3 : 17). மேலும் கிறிஸ்து அன்பு, சந்தோஷம் தனது ஜனங்கள் மீது நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார் (யோவான் 15 : 11). ஜனங்கள் கிறிஸ்துவின் கட்டளைகள் மற்றும் பிரமாணங்களை பின்பற்றி இரட்சிப்பிலும், அன்பிலும் நிலைத்திருக்கும்  பொழுது தான், சபையே நீ எனக்கு ரூபவதியாகவும், நீ எனக்கு இன்பமானவளாகவும் என் பார்வையில் இருக்கிறாய் என்று  சந்தோஷத்தோடு மணவாளனாகிய இயேசு கூறுகின்றார்.

உங்கள் நிமித்தம் கிறிஸ்து சந்தோஷமாக இருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

குறிப்பு வசனம்:  ஆதி 12 : 11, ஆதி 24 : 16





  :   27 Likes

  :   108 Views