உன்னதப்பாட்டு 7 : 4
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 7 : 4

"உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப் போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.”

"உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும்” இயேசு கிறிஸ்து சபையினுடைய கழுத்தை யானைத்தந்தத்தை போன்ற வலிமைக்கும், கோபுரம் போன்ற ஒரு உயர்வுக்கும் ஒப்பிடுகிறார். கழுத்து என்பது தலையையும் உடலையும் இணைக்கின்ற ஒரு பகுதியாக உள்ளது. வேதத்தில் இயேசு கிறிஸ்து நமக்கு தலையாகவும் (எபே 4 : 15), சபை சரீரமாகவும் (எபே 4 : 16) இருக்கிறதென்று கூறப்பட்டுள்ளது. சபையையும், இயேசு கிறிஸ்துவையும் இணைக்கின்ற இந்த கழுத்து மிகவும் வலிமையானதாக இருக்க வேண்டும். அதாவது கிறிஸ்துவோடு நமக்கு இருக்கிற ஐக்கியம், உறவு மிகவும் பலமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை இந்த பகுதி குறிப்பிடுகிறது.

வேதத்தில் கழுத்தைப் பார்க்கும் போது, கழுத்து நுகத்தைச் சுமக்கிறதாக கூறப்படுகிறது (ஓசியா 11 : 4, எரே 28 : 12, ஏசா 10 : 27)"நுகம்” என்பது மாட்டு வண்டியில் மாடுகளின் கழுத்தில் போடப்பட்டிருக்கும் மரத்திலாளான கட்டையைக் குறிக்கும். எரே 30 : 8 -ல் நுகம் என்பது அடிமைதனத்தைக் குறிக்கிறது. அந்த நுகத்தின் கட்டுகளை அறுப்பேன் என்று கர்த்தர் வாக்கு பண்ணுகிறார். இன்று அடிமைதன நுகம் நமது கழுத்திலிருந்து நீக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவினால் இலகுவான நுகம் கொடுக்கப்பட்டிருக்கிறது (மத் 11 : 30). அது கிறிஸ்துவுக்கு அடிபணியவும், கிறிஸ்துவினுடைய பணியைச் செய்து முடிக்கவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் பார்வையில் சபை ந்த நுகத்தைத் தனது கழுத்தில் ஏற்றிக் கொண்டு, தாவீதின் கோபுரத்தை போல் இருக்கிறார்கள். 

 "உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும்"  கண் புரிதலைக் குறிக்கிறது. ஏனென்றால் உடலின் பார்வை அதன் ஆவியின் பார்வையுடன் ஒத்துப்போக வேண்டும். எஸ்போன் முன்பு எமோரியர்களின் அரசனான சிகோனின் இருக்கையாக இருந்தது (எண் 21 : 26). பத்ரபீம் அதன் வாயில்களில் ஒன்றாகும். இங்கே அவை "குளங்கள்" என்று சொல்லப்படுகின்றன, அவற்றின் நீர் தெளிவானது, அமைதியானது, நிலையானது, அசைவற்றது மற்றும் தொலைவில் மரங்கள் மற்றும் தோப்புகளுக்கு இடையில் மிகவும் அழகாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கண்கள் குளங்களில் உள்ள தெளிந்த நீரைப்போல தெளிவானதாக இருக்க வேண்டும். கண் சரீரத்தின் விளக்காக இருக்கிறது என்று வேதம் நமக்கு சொல்கிறது. "கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்." (மத்   6 : 22). வ்வாறு சரீரத்துக்கு வெளிச்சமாகவும் நம்முடைய ஆத்துமாவுக்கு வாசலாகவும் இருக்கிற நம்முடைய கண்கள் தூய்மையானதாகவும், அதாவது பரிசுத்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். நமது பார்வையும் பரிசுத்தமுள்ளதாக இருக்க வேண்டும்.  புறாக்களைப் போல சமாதானமும் பரிசுத்தமும் நிறைந்த கண்களாக சபையிலுள்ள ஒவ்வொருவருடைய கண்களும் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவர் இங்கே வலியுறுத்துகிறார். மேலும் இயேசு கிறிஸ்து சீஷர்களிடம் உங்கள் கண்கள் பாக்கியமுள்ளது என்று (மத் 13 : 16, லூக் 10 : 23) -ல் சொல்லுகிறார். ஏனென்றால், ஜனங்கள் கண்களால் கர்த்தருடைய அற்புதங்களையும், அடையாளங்களையும் பார்த்து அவற்றைப் புரிந்து கொள்கிறார்கள். எனவே கண்கள் பாக்கியமுள்ளது.

"உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது” மூக்கு என்பது சுவாசிப்பதற்கும், அதே வேளையில் வாசனையை அறிந்து கொள்வதற்கும் உதவுகிறது. வாசனை என்பது நல்ல வாசனை, கெட்ட வாசனை இரண்டும் உண்டு. ஆனால் இங்கே கிறிஸ்துவின் மணவாட்டி எப்படிப்பட்ட வாசனையை வெளிப்படுத்துகிறாள் என்றால்? 2 கொரிந்தியார் 2:14,16 ,ல் சொல்லப்பட்டிருப்பது போல கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிறவர்களாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறார்கள்.

 மூக்கு மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது. நாம் உயிரோடு இருப்பதற்கு, தேவன் தந்த ஆவி நம்முடைய நாசியில் இருக்க வேண்டும் (யோபு 27 : 2). மேலும்  நாம் பார்க்கவோ, தொடவோ, கேட்கவோ முடியாத பல விஷயங்கள் உள்ளன் நாம் அவற்றை மூக்கினால் முகர முடியும். அதேபோல கர்த்தருடைய வேலையின் பாதுகாப்பிற்காக, லீபனோனின் கோபுரம் போன்ற ஒரு மூக்கு நமக்குத் தேவை. கிறிஸ்தவராகிய நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வாசனையை மட்டுமே உணர்ந்து, அதை மட்டுமே நாம் நம்முடைய வாழ்வில் பெற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென்று, இயேசு கிறிஸ்து இன்று சபையைப் பார்த்து அழைக்கிறார். இங்கே மூக்கை தமஸ்குவின் திசையை நோக்கியிருக்கும் கோபுரத்திற்கு வசனம் ஒப்பிடப்படுவதை காணலாம்; பொதுவாக ஒரு பட்டணம் அல்லது அலங்கம் என்றால் முதலாவது இருப்பது கோபுரம் தான். அப்பட்டணத்திலே, உயரமாக பெரிய தோற்றமளிக்க கூடியதாக இருக்கிறது கோபுரம்தான். இந்த வசனத்திலும் ஒரு மனிதனுடைய உடலிலேயே முதலாவதாக மிகவும் முக்கியமாக காட்சி கொடுக்கிறது மனிதனுடைய முகம் அதிலும் குறிப்பாக மூக்கு. தேவனுடைய ஆவியைப் பெற்று சுவாசிக்கிற ந்த மூக்கு ,ந்த கோபுரத்தைப் போல நமது வாழ்விற்கு முதன்மையானதாக காணப்படவேண்டும்.

இந்த வசனம் சபையினுடைய வலிமை, பரிசுத்தம் மற்றும் வாசனை வீசுகிற காரியத்தைக் கவிதை நடையில் பேசுகிறது.

நீங்கள் கிறிஸ்துவுக்குள் வைராக்கியமாக, பரிசுத்தமாக, வாசனை வீசுகிறவர்களாக இருக்கிறீர்களா?

குறிப்பு வசனம்: சங் 45 : 8, உன் 4 : 4, உன் 4 : 1




  :   23 Likes

  :   95 Views