உன்னதப்பாட்டு 7 : 13
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 7 : 13

"தூதாயீம் பழம் வாசனை வீசும்;; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.”

"தூதாயீம் பழம் வாசனை வீசும்”  இந்தப் பழம் அன்பை பரிமாறிக் கொள்ளும்; காரியத்தையும் வாசனைக் கொடுக்கிற காரியத்தையும்  வெளிப்படுத்துகிறது. 

"நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு”  வாசல்களண்டை  என்பது ஆலயத்தை குறிக்கும் (சங்கீதம் 100:4).தன் ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்றால், பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு மாய வார்த்தையினால் உண்டாயிருக்கிற கனிகளும் உண்டு என்பதை இந்தப் பகுதி விளக்குகிறது. மேலும் சபை சொல்கிறது, ஆண்டவரே உம்மை புதிதாக ஏற்றுக்கொண்டு கனியும் வாசனையும் கொடுக்கிறவர்களும் உண்டு, அதேபோல் கிறிஸ்தவர்களாக இருந்து பின்வாங்கிப் போய் மறுபடியும் வந்து கனி கொடுக்கிற கிறிஸ்தவர்களும் இங்கே இருக்கிறார்கள் (லூக் 15 : 20-22). இவ்வாறு சபையாகிய  தோட்டத்தில்  கனி கொடுக்கிறவர்கள் அநேகம் பேர் உண்டு என்பதைக் கூறுகிற ஒரு பகுதியாகும்.

"என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்” என் நேசரே!  வந்து பாருங்கள் என்று ஊழியம் செய்கிற சபை ஆண்டவரிடம் அன்பாக சொல்லுகிற ஒரு வார்த்தையாகும்.

அன்பானவர்களே! அதிகாலையில் அவரைத் தேடுங்கள், நீங்கள் உங்கள் வாழ்வில் அருமையான கனிகளைக் கொடுக்க முடியும்.

உங்கள் வாழ்க்கையைக் குறித்து நீங்கள் இப்படி சாட்சி கூறமுடியுமா?

குறிப்பு வசனம்: யோவான் 15 : 8, எபே 5 : 9





  :   24 Likes

  :   91 Views