உன்னதப்பாட்டு 7 : 10
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 7 : 10

சபை பேசுவது

"நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.”

முந்தைய வசனங்களில் இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து பேசின அன்பான வெளிப்பாடுகளுக்கு இவ்வசனத்தில் சபை பதிலளிக்கிறது. இயேசுவே நான் உமக்குச் சொந்தம்; என்றும், நான் உம்முடையவளென்றும்  சொல்கிறது. அதேப்போல் இயேசு கிறிஸ்துவின் அன்பும், கிருபையும் என்மேல் இருக்கிறது என்றும்  சபை கூறுகிறது. கிறிஸ்துவுடனான சபையின் ஐக்கியம் மற்றும் அவர் மீதான ஆர்வம் சபைக்கு இருந்த நம்பிக்கையின் உறுதிப்பாட்டை வலுவாக வெளிப்படுத்துகிறது.  உன்னதப்பாட்டில் சபை பாடுகின்றப் பொழுதெல்லாம்  மீண்டும், மீண்டும் இதே பாடல் வரிகள் படப்படுவதை நாம் பார்க்க முடியும் (உன் 2 : 16).  

கிருபையினால் அனைத்து பலனும், அதைச் செயல்படுத்துவதில் வலிமையையும் தெய்வீக சத்தியங்களில் சபையினுடைய வெளிச்சம் மற்றும் அறிவு அகியவற்றைப் பாதுகாக்க சபையினுடைய வைராக்கியம், தைரியம், நேர்மையான அந்தஸ்து, பரிசுத்தமான நடை, வார்த்தை மற்றும் எல்லா நல்ல விஷயங்களும் காரணமாக இருந்தன. இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தம் கொண்டு, நம்மை விலைக் கொடுத்து வாங்கினார் என்று வேதத்தில் பார்க்கிறோம். நாம் அவருக்கு சொந்தமானவர்கள். அவருடைய அன்பு நம்மில் இருக்கிறது (யோவான் 17 : 24,26). அதேபோல் நாம் நமக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை 1 கொரி 6 : 19-20 -ல் பார்க்கிறோம். நான் எனக்கு சொந்தமல்ல, நான் இயேசு கிறிஸ்துவினுடையவன்/ள் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். இதைத் தான் இங்கு சபை கூறுகிறது;  நான் என் நேசருடையவள் என்று.

நீங்கள் உங்களில் உறுதியாக இருக்கிறீர்களா? நான் கிறிஸ்துவினுடையவன்/ள் என்று.

குறிப்பு வசனம்: சங் 119 : 94, 1 கொரி 6 : 19, 20, கலா 2 : 20, ஏசா 27 : 2




  :   23 Likes

  :   103 Views