"உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம் போலிருக்கிறது.”
இது தேவ பிரசன்னத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. சபையாகிய மணவாட்டியின்; முகம் கர்த்தருடைய பிரசன்னத்தினால் நிறைந்து காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. பவுல் இதைக்குறித்து புதிய ஏற்பாட்டில் விளக்குகிறப் பொழுது 2கொரி 3 : 13,14 ,ல் "ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.” ஏனென்றால் கிறிஸ்துவினாலே முக்காடு நீக்கப்பட்டிருக்கிறது என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இயேசு கிறிஸ்துவினாலே முக்காடு நீக்கப்பட்ட நமது கன்னங்கள் அதாவது நமது முகம் அவருடைய பார்வைக்கு மாதுளம்பழம் போல் அழகாக காணப்படுகிறது என்பதை கவிதை நடையில் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. நாம் முக்காடுப் போட்டு இருக்கிற இந்த உலகத்திற்கு நேராக நமது முகத்தைத் திருப்பாமல் எப்பொழுதும் நமது முகம் இயேசுவையே நோக்கி இருக்க வேண்டும். இயேசுவை மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்ற உறுதியுடனும் காணப்படவேண்டும். என் கன்னங்கள் இயேசுவுக்கு மட்டுமே திறந்திருக்கும் என்பதையும் இது குறிக்கிறது.
நீங்கள் தேவ பிரசன்னத்தை அனுபவிக்கிறீர்களா?
குறிப்பு வசனம்: யாத் 34: 33-35, 2கொரி 3: 13-14, உன் 4: 3
Write a public review