உன்னதப்பாட்டு 6 : 12
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 6 : 12

"நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் ரதங்களுக்கு ஒப்பாக்கிற்று.”

இயேசு கிறிஸ்துவின் ஆத்துமா இரட்சிப்பை அருளும் இரதமாகவும், அது வேகமும், துரிதமாக செயல்படுவதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அம்மினதாபின் இரதம்” அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருந்தான் (எண்ணாகமம் 2: 3 , 10:14). தாவீது அரசன் இந்த அமிதாபின் சந்ததியில் தான் பிறக்கிறார். (ரூத் 4:18-22). இயேசு கிறிஸ்து தாவீதின் சந்ததியில் பிறந்தார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அம்மினதாபின் இரதம் வேகமாக ஓடக்கூடியது. அவ்வளவு வேகமாக என் ஆத்துமா என் சபையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். மணவாளன் இயேசு கிறிஸ்து நம்மைப் பார்க்க வேகமாக ஓடி வருகிறார். இரதம் என்பது இரட்சிப்பையும் குறிக்கும் (ஆபகூக்3 : 8). இயேசு கிறிஸ்துவினுடைய ஆத்துமா ஜனங்களுக்கு இரட்சிப்பைக் கொடுப்பதில் வேகமாக இருக்கிறது என்பதை இந்தப் பகுதி நமக்கு விளக்கிக் காட்டுகிறது. இது இயேசு கிறிஸ்துவுக்கு சபையில் இருக்கும் அன்பின் வெளிப்பாடு. சபை கிறிஸ்துவில் பின்வாங்காமல் இருந்தால், அவர் ஆத்துமா சபையில் பிரியமாயிருக்கும் (எபி 10 : 38).

அன்பானவர்களே! நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை வழுவாதபடி காத்துக்கொண்டு, நம்மை மீட்டு தமது சொந்த ஜனமாக்குவதற்கு (இரட்சிப்பை அளிக்க) அவரது ஆத்துமா தீவிரமாக இருக்கிறது என்பதைக் கூறுகிறார். ஒருவேளை இயேசு கிறிஸ்துவை விட்டு பின்வாங்கி இருந்தால், இன்றே அவரை நோக்கிப் பாருங்கள்.

கிறிஸ்துவின் அன்பை புரிந்து கொள்ளுகிறீர்களா?

குறிப்பு வசனம் : லேவி 26: 11-12, எரே 31: 20,   ஓசியா 11: 8-9, லூக் 15: 20, ஆதி 41: 43, ஆதி 46: 29





  :   22 Likes

  :   95 Views