"என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.”
கிறிஸ்துவின் மணவாட்டி தனது சுகவாழ்வை விட்டு, தன்னைத்தான் வெறுத்து, கிறிஸ்துவுக்காக பாடுபடவும், சிலுவை சுமக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்;. ஆனால் இங்கே இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கிற சபை, தனது ஆவிக்குரிய நிலையில் இருந்து பின் வாங்கி போவதும், ஊழியம் செய்வதிலும் சோர்வு பெற்று பின்வாங்கி போய் இருப்பதையும், மறுபடியும் நான் எப்படி எழுதுவேன் என்பதான ஒரு கேள்வியோடு இந்த வசனம் காணப்படுகிறது.
"என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன்” சபை சொல்லுகிறதாவது, நான் இயேசு கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக்கொண்ட வஸ்திரமாகிய இரட்சிப்பின் வஸ்திரம் (ஏசா 61 : 10), நீதியின் வஸ்திரம் (ஏசா 61 : 10), துதியின் வஸ்திரத்தை (ஏசா 61 : 3) (ஆவிக்குரிய வஸ்திரத்தை) நான் இழந்து விட்டேன். இது இயேசு கிறிஸ்துவை விட்டு பின்வாங்கிப் போனவர்களைக் குறிப்பிடுகிறது (வெளி 2 : 4). அனேக கிறிஸ்தவர்கள் இன்று வெளிப்பிரகாரமாக அல்ல, உள்பிரகாரமாக பின்வாங்கி போனவர்களாக காணப்படுகிறார்கள். இந்த ஆசீர்வாதத்தை உணர்ந்த சிலர் இதை மறுபடியும் நான் எப்படிப் பெற்றுக் கொள்வேன் என்று தனக்குள்ளாக கேட்கிற ஒரு கேள்விதான் இது (சங் 51:12).
"என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன்” இங்கே பாதங்கள் சுவிசேஷத்தின் ஊழியம் செய்வதை குறிப்பிடுகிறது என்று ரோமர் 10 : 15,ஏசாயா 52 : 7 -ல் பார்க்கிறோம். கர்த்தருடைய ஊழியத்திற்காகவும் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காகவும் நடந்து, நடந்து பாதங்கள் அழுக்காகின. இப்பொழுது கழுவப்பட்டுவிட்டது. அதாவது, நாம் காடு மேடு என்று அலைகின்ற பொழுது கால்களிலே அழுக்குப்படுமல்லவா? அதைத்தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொழுது நாம் ஊழியத்துக்குப் போகாமல், அந்த மாதிரி ஊழியங்களையெல்லாம் நிறுத்தியதால் தான் பாதங்கள் சுத்தமாக இருக்கிறது. நான் மறுபடியும் கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்கு என் கால்கள் பிரயாசப்பட்டு, நான் எப்படி அழுக்காக்குவேன் என்று கேட்கின்ற ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள்.
அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டு, அவருக்காக வைராக்கியமாக வாழ்ந்தவர்கள் இன்று பின்வாங்கிப் போய் இருப்பீர்களானால் மறுபடியும் அவரிடம் சேருங்கள். அவர் மறுபடியும் அவருடைய வஸ்திரத்தைக் கொடுக்க ஆவலாக இருக்கிறார். அதேப்போல ஆரம்பக் காலத்தில் ஊழியத்திற்காக வைராக்கியமாக ஓடின கால்கள் எப்படியாவது சுவிசேஷத்தை அறிவித்து விட வேண்டுமென்று வாஞ்சையாக இருந்தவர்கள், நாட்கள் போகப்போக சில நேரங்களில் ஊழியத்தின் வேகம் குறைந்து இருக்குமானால், மறுபடியும் ஓட ஆயத்தமாகுங்கள். கர்த்தர் உங்களுக்கு அதற்கான பலத்தைத் தருவார். ஏனென்றால் அவர் தான் உங்களை அனுப்புகிறார். "அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ: நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய். உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.” (நியா 6 : 14), கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுத் தைரியமாக ஊழியம் செய்யுங்கள்.
இன்று உங்கள் வஸ்திரம், பாதங்கள் எப்படி இருக்கிறது?
குறிப்பு வசனம்: நீதி 13: 4, மத் 25: 5, ஆதி 35: 2, ஆதி 41: 42, யாத் 28: 41, யாத் 29: 29, யாத் 39: 1, லேவி 10: 6, ஏசா 52: 1, யோவேல் 2: 13, யூதா 1:23
Write a public review