உன்னதப்பாட்டு 5 : 11
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 5 : 11

"அவர் தலை தங்கமயமாயிருக்கிறது ; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும் காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.”

இயேசு கிறிஸ்துவினுடைய ராஜரீக கிரீடத்தையும் ஆளுகையையும் குறிக்கிறது. 

"அவர் தலை தங்கமயமாயிருக்கிறது”  வெளி 14  : 14 -ல் இயேசு கிறிஸ்து சிரசின்மேல் பொற்கிரீடத்தோடு உட்கார்ந்திருப்பதை விளக்குகிறது. இது இயேசு கிறிஸ்துவின் கம்பீரத்தையும் அவருடைய ராஜரீக அதிகாரத்தையும் வெளிப்படுத்துகிறது. ஒருநாள் அவர் எல்லா ஜனங்களையும் நியாயந்தீர்ப்பார் எல்லோரையும் ஆளுகையும் பண்ணுவார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

"அவர் தலைமயிர் சுருள் சுருளாயும் காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது” இங்கு "சுருள் சுருளாயும்” என்பது இயேசு கிறிஸ்துவின் அடர்த்தியான முடியையும் "காகத்தைப்போல் கருமை” என்பது அவரது இளமையையும் குறிக்கிறது. அவர் 33 வருடம் இந்த உலகத்தில் மனிதனாக வாழ்ந்து பின்பு மரித்து பரம் ஏறினார். அவர் இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் அவர் ஒரு இளைஞராக இருந்ததை இந்த பகுதி நமக்கு விளக்கிக் காட்டுகிறது.

கிறிஸ்துவின் ராஜரீகத்தை அறிகிறீர்களா?

குறிப்பு வசனம்: வெளி 14: 14 எபே 1: 22




  :   20 Likes

  :   81 Views