"என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.”
இந்த வசனம் ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பிறகு, அவன் பாதுகாக்கப்படுவதையும், பரிசுத்த ஆவியானவரால் முத்திரிக்கப்படுவதையும் இது குறிப்பிடுகிறது (எபே 1 : 13).
"நீ அடைக்கப்பட்ட தோட்டம்” என்பது ஆத்துமாவைக் குறிக்கிறது. எப்படியென்றால் எரே 31 : 12, ஏசா 58 : 11-ல் ஆத்துமாவை தோட்டத்தோடு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது. ஆத்தும தோட்டத்தை எப்படி அடைத்து பாதுகாப்பது? கர்த்தருடைய வசனத்தின் மூலம் தான் அதை அடைத்து பாதுகாத்துக்கொள்ள முடியும். (ஆதி 2 : 15, சங் 119 : 25,28).
"மறைவு கட்டப்பட்ட நீரூற்றும்” இது ஆவியைக் குறிக்கிறது. நீதி 10 : 11 -ம் வசனத்தில் நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று என்றும் சங் 141 : 3 -ல் வாய்க்குக் காவல் வையும் என்றும், அதாவது உதடுகளுக்குக் காவல் வையும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. வாய், வார்த்தை ஆவியோட தொடர்புடையது என்பதை நாம் எபே 4 : 29,30-ல் பாரக்க முடிகிறது.
"முத்திரிக்கப்பட்ட கிணறு” என்பது சரீரத்தைப்பற்றி கூறுகிறது. 2பேதுரு 2 : 17, 2தீமோ 2 : 19 -ல் நாம் பார்க்கும் போது அநியாயத்தை விட்டு விலகுவது சரீரத்துக்குரிய முத்திரையென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே இந்த வசனத்துக்குரிய அர்த்தம் ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றையும் பாதுகாத்துக் கொள்வதை இந்த வசனம் நமக்கு அழகாக சொல்லுகிறது.
அன்பானவர்களே! இன்று இயேசு கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால், நாம் ஆவிக்குரிய வஸ்திரத்தைப் பெற்று பரிசுத்த ஆவியானவரால் முத்தரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறோம்.
கிறிஸ்துவின் இந்த பாதுகாப்பைப் பெற்று இருக்கிறீர்களா?
குறிப்பு வசனம் : ஆதி 2: 15, உன் 5: 1, சங் 119: 25,28
Write a public review