"நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.”
இந்த வசனத்தில் வரும் காவலாளர்கள் என்பது ஜாமக்காரர்களைக் குறிக்கும். நகரத்திலே திரிகிற காவலர்களைப் பார்த்து கைவிடப்பட்டவர்கள் கேட்கிறதாவது, என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா? கர்த்தருடைய செய்தியை நகரத்தார்க்கு அறிவிக்க தீர்க்கதரிசிகள் பழைய ஏற்பாட்டில் ஜாமக்காரனை நியமித்தார்கள்; (ஏசாயா 21 : 6). அவர்கள்தான் நகரத்தின் காவலாளி என்று அழைக்கப்படுகிறார்கள் (ஏசாயா 52 : 8, 62 : 6, எசேக் 33 : 7). இது ஏழு வருட உபத்திரவக் காலத்தில் நடக்கும் சம்பவம்.
இந்த ஜாமக்காரர்கள் கர்த்தருடைய செய்தியைப் பிரசங்கிப்பது, தனது கோட்பாடுகளை அறிவிப்பது, ஜனங்களின் நிலையைச் சுட்டிக்காட்டுவது, அழிவுக்கான பரந்த பாதையில் பாவிகளுக்கு ஆபத்து பற்றிய அறிவிப்பைக் கொடுப்பது, பரிசுத்தவான்களின் பிழை, மதவெறி மற்றும் ஒழுக்கக்கேட்டை சுட்டிக்காட்டுவது, நிதானம், விழிப்புணர்வு, விவேகம், தைரியம் மற்றும் விசுவாசம் என்னும் தேவைப்படும் அனைத்தும் நற்செய்தி ஊழியத்தின் அவசியத்தையும் பயனையும் இவர்கள் ஊழியம் காட்டும். இந்த ஜாமக்காரராகிய காவலாளிகள், இயேசுவைத் தேடி திரிகிற ஜனங்களைக் காண்கிறார்கள். அப்பொழுது இந்த கேள்வியை அவர்களிடம் வைத்து, என் ஆத்ம நேசரை நீங்கள் பார்த்தீர்களா? என்று கைவிடப்பட்டோர் கேட்கிறார்கள், ஆனாலும் இவர்களுக்கு சரியான பதில் அவரிடமிருந்து கிடைக்கவில்லை என்பதை அடுத்த வசனம் நமக்கு தெளிவுப்படுத்துகிறது.
அன்பானவர்களே! இந்த கிருபையின் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிற நாம் இயேசு கிறிஸ்துவின் கிருபையை பயன்படுத்திக்கொள்வோம். சபை எடுத்துக் கொள்ளப்பட்டப் பிறகு உபத்திரவக் காலத்தில் வாய்ப்பே இல்லை, அந்த ஏழு வருடமும் சிலர் மட்டுமே, கிறிஸ்துவின் நேசத்தால் அவருக்காக இரத்தசாட்சியாக மரித்து மணவாட்டியின் தோழி என்கிற பாக்கியத்தைப் பெறுவார்கள். உபத்திரவ நாட்களில் கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும் பூமியில் கிரியை செய்யமாட்டார்கள்.
காலத்தைப் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு வசனம்: ஏசாயா 21: 6-12, ஏசாயா 62: 6, எரேமியா 6: 17-19, எசேக் 3: 17, எசேக் 3: 7
Write a public review