"நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை".
முந்தைய வசனத்தில் கைவிடப்பட்டவர்கள் கிறிஸ்துவைத் தேடுவதில் ஒரு சோர்வு, ஒரு சிறு தயக்கம் இருந்தது. இந்த வசனத்தில் அவர்கள் உற்சாகத்தோடும் வைராக்கியத்தோடும் கிறிஸ்துவைத் தேட முயற்சிக்கிறார்கள். நான் எப்படியும் தேடி கண்டுபிடித்து விடுவேன் என்ற ஒரு நம்பிக்கையும் அவர்களுக்குள் காணப்படுகிறது. கைவிடப்பட்டவர்கள் தனது ஆத்தும நேசராகிய இயேசு கிறிஸ்துவைத் தேடி அலைவதை கவிதை முறையில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கைவிடப்பட்டவர்கள் முன்மொழியும்போது நான் கிறிஸ்துவைத் தேடுவதில் விடாமுயற்சியைக் கொண்டிருக்கிறேன் என்பதாக கூறுகிறது. இது கிறிஸ்து மீதான மிகுந்த அன்பின் சான்றாகும், அதில் அவர்கள் தன்னை நிந்தனை மற்றும் அவதூறுக்கு உட்படுத்தியது மட்டுமல்லாமல், தீங்கு மற்றும் ஆபத்தில் கூட கஷ்டப்பட்டாலும் தொடர முடிவு செய்கின்றனர். எனவே அவர்கள் இயேசு கிறிஸ்துவை எல்லாவிதத்திலும் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறார்கள். அவரைத் தேடி கண்டுக் கொள்வதில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் என் ஆத்தும நேசரை நான் தேடுவேன், சோர்வடையமாட்டேன் என்று அவரைக் கண்டுபிடிக்கும் வரை தேடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். "தேடியும் நான் அவரைக் காணவில்லை” கைவிடப்பட்டவர்கள் எப்படியாவது அவரிடம் சேர்ந்து விட வேண்டும் என்று அவரைத் தேடிப் பார்க்கிறார்கள்; அவரைக் காணவில்லை, எந்த பதிலும் இல்லை, அவர்களுக்கு மறுஉத்தரவு கொடுக்கப்படவில்லை, கர்த்தருடைய வார்த்தைக்காக அலைந்து திரிவார்கள் ஆனாலும் கிடைக்காமல் போவார்கள் என்று (ஆமோஸ் 8 : 12) -ல் சொல்லப்பட்டிருக்கிறது.
அன்பானவர்களே! சபை கைவிடப்பட்டப்பிறகு என்னதான் தீவிரமாக ஓடினாலும் வாய்ப்பு மறுக்கப்படும். ஆகவே இது ஒரு நல்லக் காலம் கர்த்தரை நாம் கண்டடைய, இப்பொழுது நாம் இயேசு கிறிஸ்துவை தீவிரமாக பற்றிக் கொள்வோம், நித்திய மீட்பைப் பெறுவோம்.
இந்த சூழல் உங்கள் வாழ்வில் வந்து விட கூடாது என்ற எண்ணம் இருக்கிறதா?
குறிப்பு வசனம்: ஏசாயா 64: 7, ரோமர் 13: 11, எபேசி 5: 14, நீதி 1: 20-28, யோபு 23: 8, 9, சங்22: 2
Write a public review