உன்னதப்பாட்டு 3 : 10
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 3 : 10

"அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.”

இது முந்தின வசனமாகிய இரட்சிப்பின் இரதம் எவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது என்பதை இந்த வசனம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது. அதின் தூண்கள் வெள்ளியினால் செய்யப்பட்டிருக்கிறது. தூண்கள் இரதத்தின் மேற்பகுதியை தாங்கிப் பிடிக்கிறது, அதே நேரத்தில் அந்த ,ரதத்தை அலங்கரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் அரசாட்சியில் அவருடைய இரட்சிப்பின் இரதத்தின் தூண்கள் வெள்ளியினால் அலங்கரிக்கப்படும். இது எதை வெளிப்படுத்துகிறது என்று பார்ப்போம்.

அதின் தூண்களை வெள்ளியினாலும்,  கிறிஸ்துவினுடைய ஊழியர்களைக் குறிப்பிடுகிறது என்று (கலா 2 : 9) -ல் பார்க்கிறோம். அதே நேரத்தில் தூண் சத்தியத்தைக் குறிப்பிடுகிறது என்று 1தீமோ 3 : 15 -ல் பார்க்கிறோம். கர்த்தருடைய சொற்களை வெள்ளிக்கு ஒப்பாக சங் 12 : 6 -ல் சொல்லப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் வார்த்தையின் உறுதியும், அவருடைய கோட்பாடுகள் மற்றும் வாக்குறுதிகள் வெள்ளி போன்று தூய்மையானவைகள். இயேசு கிறிஸ்து தன்னுடைய அரசாட்சியின் தூண்களாகிய தன்னுடைய சத்தியத்தை தனது வாயின் வார்த்தைகளாய்ப் போஷிப்பார். இதை தனது சேனைக் கூட்டத்தைக் கொண்டு செய்து முடிப்பார்.

தட்டைப் பொன்னினாலும் - தட்டைப் பொன்னினால் செய்யப்பட்டிருக்கிறது. வேதத்தில் பொன்னும் கர்த்தருடைய வார்த்தையைக் குறிப்பிடுகிறது. சங் 19 : 9,10. தூய தங்கத்தால் மூடப்பட்டிருந்த கீழ் பகுதியின் மூலம் அவர் வார்த்தை மற்றும் வாக்குறுதிகளின் அடித்தளத்தை புரிந்து கொண்டதாக தோன்றலாம், இது கிறிஸ்துவின் உடன்படிக்கை அல்லது கிறிஸ்துவின் மத்தியஸ்தம், அதில் அனைத்து வாக்குறுதிகளும் ஆம் என்றும் ஆமென் என்றும் உள்ளது (2கொரி 1 : 20).

ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார் - ஆசனம் என்பது இருக்கையைக் குறிப்பிடுகிறது. நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; என்று சங்கீதம் 89: 14 -ல் சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய நீதியும் நியாயமும் இரத்தாம்பரம் போல் மிகவும் உயர்வானது என்பதை வசனம் நமக்கு விளக்குகிறது. 

இயேசு கிறிஸ்துவினுடைய ஆட்சியின் மகத்துவத்தையும், மகிமையும் வெளிப்படுத்துகிறது. அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது. அதாவது அந்த ஆட்சியிலே இஸ்ரவேலருக்கும் (யூதர்கள்) ஒரு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் அன்பு அவர்களுக்கும் உண்டு என்பதை ந்த பகுதி கூறுகிறது.

இன்று கிறிஸ்துவின் ஆட்சி உங்களுக்குள் இருக்கிறதா?

குறிப்பு வசனம்: 1இராஜா 7: 12, 1தீமோ 3: 15, வெளி 3: 12




  :   24 Likes

  :   83 Views