இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை
"இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.”
இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையை இந்த வசனம் குறிப்பிடுகிறது. "என் நேசருடைய சத்தம்” என்பது எக்காள சத்தத்தைக் குறிப்பிடுகிறது. 1தெச 4 : 16,17-ல் இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து இறங்கி வருகிறார், ஆனால் பூமிக்கு அல்ல மத்திய வானத்தில் வந்து அவர் முதலாவது மரித்தோரையும் பின்பு உயிரோடு இருக்கிற தனது சபையையும் ஆகாயத்தில் வந்து எடுத்துக்கொண்டு போவதையும் நாம் இந்த வசனத்தில் பார்க்கிறோம்.
இரகசிய வருகை என்றால் கிறிஸ்து பரலோகத்திலிருந்து மத்திய ஆகாயத்திற்கு வரும்போது இவ்வுலகில் வாழும் மக்களில் கிறிஸ்துவுக்குள் இருப்போர் மறுரூபமாக்கப்பட்டு, எடுத்துக்கொள்ளப்பட்டு, கிறிஸ்துவைச் சந்தித்து, கிறிஸ்து ஆயத்தம் பண்ணின உறைவிடங்களைச் சென்றடைவதாகும். (1தெச 4 : 14-17, 1கொரி 15 : 51-53, யோவான் 14 : 2-3). அதுவரை கிறிஸ்துவுக்குள் மரணம் அடைந்தவர்களும் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அச்சமயத்தில் உயிருடன் இருக்கும் மக்களில் கிறிஸ்துவுக்குள் மணவாட்டி தகுதியோடு வாழ்வோர் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். மற்றவர்கள் கை விடப்படுவார்கள். வேதத்திலே இதற்கு சாட்சியம் உண்டு.
1) ஏனோக்கு (ஆதி 5 : 21-24) 2) எலியா (2,ராஜா 2 : 11)
"அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.” - இந்த வார்த்தை இயேசு கிறிஸ்து பரலோகத்தில் சீயோன் பர்வதத்திலிருந்து தனது மனவாட்டியாகிய சபையை அழைத்துக்கொண்டு போக வரும் அழகைக் குறிப்பிடுகிறது. அடுத்த (உன் 2 : 9) வசனத்தில் நாம் பார்க்கும் பொழுது இது தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
அன்பானவர்களே! கர்த்தரின் இரகசிய வருகைக்கு ஆயத்தப்படுவோம். அதேவேளையில் கர்த்தரின் முதல் வருகையை அதாவது இயேசு கிறிஸ்து நமக்காக பிறந்து மரித்தார் என்ற செய்தி அறிந்திராத மக்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க முன்வாருங்கள். சிந்திப்போம் செயல்படுவோம்.
நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறீர்களா?
குறிப்பு வசனம்: யோவா 3 : 29,10 : 4, வெளி 3: 20, மத் 25 : 6
Write a public review