"என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.”
“என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்” என்று சபை கிறிஸ்துவைப் பார்த்து கூறுகிறது, ஆதி 3:8 ,ல் பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை ஆதாம், ஏவாள் கேட்டார்கள். சபை இப்பொழுது பரதீசியின் மத்தியில் இருக்கிற தோட்டத்தில் இருக்கிறார்கள் (வெளி 2 : 7). ஏதேன் தோட்டத்தில் தேவனாகிய கர்த்தர் ஆதாம் ஏவாளோடு பேசியது போல, இப்பொழுது பரதீசியின் மத்தியில் இருக்கிற சபையோடு மணவாளனாகிய இயேசு கிறிஸ்து உலாவுவதையும், பேசுவதையும் இந்த வசனம் குறிப்பிடுகிறது.
ஆட்டுக்குட்டியானவரின் கலியாண நாள் வரைக்கும் இயேசு கிறிஸ்து பரதீசியின் மத்தியில் இருக்கிற மணவாட்டியாகிய சபையோடு இருப்பார். அதேநேரத்தில் பரலோகத்தில் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். பிதாவின் சித்தத்தை செய்பவராகவும் இருப்பார். அதே நேரத்தில் உபத்திரவக் காலங்களிலே சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றி முடிக்கிறவராகவும் இருப்பார். அவர் அங்கும் இங்கும் இருந்து எல்லாவற்றையும் செவ்வையாக செய்வதை கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் ஒப்பிடப்பட்டுள்ளது. கலைமானும் மரைகளின் குட்டியும் வேகத்தைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் செய்து முடிப்பதின் வேகத்தை இங்கே அழகாக குறிப்பிடுகிறது.
கிறிஸ்துவோடு தோட்டத்தில் உலாவுகிற பாக்கியத்தைப் பெற்றுக்கொள்வோம்.
குறிப்பு வசனம்: சங் 42: 8
Write a public review