உன்னதப்பாட்டு 2 : 15
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 2 : 15

ஏழு வருட உபத்திரவக் கால வெளிப்பாடு

"திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.”

திராட்சைத் தோட்டம் என்பது சபையைச் குறிக்கிறது. நரிகள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு ஒப்பிடப்பட்டனர், (எசேக் 13 : 3, எசேக் 13 : 4), நரிகள் வஞ்சகமுள்ள மற்றும் நுட்பமான மிருகம். குழிநரி என்பது ஆளுகை பண்ணுகிற அந்திக்கிறிஸ்து வின் ஆவியைவுடையவர்கள். சிறுநரி என்பது கள்ளத்தீர்க்கதரிசியாகிய அந்திக்கிறிஸ்துவின் ஆவியைவுடையவர்கள்.

இப்படிப்பட்ட பொய்யான குழிநரிகள் எளியவர்களின் இதயங்களை ஏமாற்றுகிறார்கள். மேலும் அவர்களது கோட்பாடுகள் தீங்கு விளைவிக்கும், உலகப் பொருள் மீது பேராசைக்  கொள்ளத் தூண்டும்.  இந்த குழிநரிகள் எப்போதும் போதுமான மனதுடையவர்களாக இருக்க முடியாது. இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளாகிய அந்திக்கிறிஸ்துவின் கூட்டாளிகள் சபையில் பிளவுகளையும், குழப்பங்களையும் உண்டாக்குகிறார்கள். அதுமட்டுமன்றி சபையின் அமைதியை சீர்குலைக்கவும்; மற்றவர்களைத் தகர்க்கவும்; கர்த்தரின் வார்த்தையை சிதைத்து தங்களை மேன்மைப்படுத்தி கொள்வார்கள் (2பேதுரு 2 : 1).

சபை எடுத்துக் கொள்ளப்பட்டப் பிறகு ஏழு வருடம் அந்திக்கிறிஸ்து இந்த பூமியிலே ஆட்சி செய்வான். அதில் முதல் மூன்றரை வருடம் அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலருக்கு சாதகமாக அதாவது அவர்கள் சார்பிலிருந்து அவர்களுக்கு நன்மை செய்வது போல தன்னைக் காட்டிக் கொண்டு அவர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பான்.

உபத்திரவக் காலங்களில் வாழ்கின்ற ஜனங்களுக்குள் குள்ளநரி, சிறுநரி போல் இருந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிற அந்திக்கிறிஸ்து, கடைசி மூன்றரை வருடங்களில் அவனுடைய செயல்பாடுகள் ஜனங்களுக்கு தெரியவரும் பொழுது அவர்கள் இயேசு தான் மெய்யான மேசியா என்று அறிந்து அவருக்காக மரிக்கவும் ஆயத்தமாவார்கள். கடைசியில் இயேசுவின் பகிரங்க வருகையிலே அவன் (அந்திக்கிறிஸ்து) பிடிக்கப்படுவான்.

அந்திக் கிறிஸ்துவின் நாட்களுக்கு தப்புவதற்கு வருகையில் எடுத்துக்கொள்ளப்பட முயற்சிப்போம்.

குறிப்பு வசனம்:  சங் 80 : 13, 2 பேதுரு 2 : 1-3




  :   24 Likes

  :   96 Views