உன்னதப்பாட்டு 2 : 12
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 2 : 12

"பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது ; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.”

இயேசு கிறிஸ்து தனது இரகசிய வருகையின் நேரத்தில் சபைக்கு கூறுவது என்னவென்றால், பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது. உன்னதப்பாட்டு 2 : 2 ,ல் புஷ்பங்கள் என்பது மணவாட்டியை குறிக்கிறது. அதாவது மணவாட்டி தகுதியோடு மணவாட்டி காணப்படுவது இயேசுகிறிஸ்துவை மகிழ்ச்சியில் மலரச்செய்கிறது. இந்த வார்த்தை இயேசு கிறிஸ்துவினுடைய அறுவடையைக் குறிக்கிறது. 

ஏசாயா 35 :1,2 ,ல!  1) வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். 2) அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும் கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். பாவத்தினால் நிறைந்த உலகம், நீதியினால் நிறைந்து, தேவ மக்களின் களிப்பின் மத்தியில் வெளிப்படுகின்ற தேவ மகிமையைப் பிரதிபலிக்கும் தேவனுடைய மீட்பின் நாளைக் குறித்து கூறப்பட்டுள்ளது.

"குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது”  சபையே காலங்களை அறிகிற காட்டுப்புறா, குருவி போன்ற பறவைகள் பாடுகிற சத்தம் கேட்கிறது (எரே 8 : 7). நாம் மணவாட்டி தகுதியோடு நம் காலங்களை அறிந்திருக்க வேண்டும். அந்த சத்தத்தின் அர்த்தம் என்னவென்றால், இது சபைக்கு வசந்த காலம், நான் உன்னை என்னுடைய இடத்திற்கு அழைத்துக்கொண்டு போகும் நேரம் இதுதான். எழுந்து வா என்னோடு என்பதாகும். இது கவிதையாகவும், உவமையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

வேத வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய வருகையின் அடையாளங்களான புஷ்பங்கள் பூத்து குலுங்குகிறது. காட்டுப்புறாக்கள் மற்றும் குருவிகள் சத்தம் கேட்கிறது, குருவிகள் பாடும் காலம் வந்தது. இவையெல்லாம் காலம் மிக சமீபம் என்று காலத்தைக் குறித்த ஒரு அடையாளங்களாக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நாள் வந்துவிட்டது என்று சபையே நீ அறிந்துகொள் என்பதாக இந்த கர்த்தருடைய வார்த்தை நமக்கு உணர்த்துகிறது.

வேதத்தில் சொல்லப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்களை அறிந்திருக்கிறீர்களா?

குறிப்பு வசனம்:  ஏசாயா 35: 1, 2, ஓசியா 14: 5-6, சங் 92 : 12




  :   36 Likes

  :   108 Views