"இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.”
இந்த வசனம் வருகையின் காலத்தைக் கூறுகிறது. ஓசியா 6 : 3 இல் தேவ மக்களின் உண்மையான மனந்திரும்புதல் ஆவிக்குரிய புதிய தாக்குதலைக் கொண்டுவரும், அதன் பின்பு அவர்கள் தேவனை அதிகமாக அறிந்து கொள்ளும் போது, அவர் மழைபோல் வந்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் அருளுவார். இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கான அடையாளங்கள் வேதத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் இந்த வசனத்திலும் அடுத்த இரண்டு வசனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மாரிகாலம்” என்பது மழைக்காலத்தை குறிப்பிடும். உபாகமம் 32:1,2 ,ல் வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது தேவனுடைய வார்த்தை, உபதேசம், வசனம் தான் மழையாக பொழியும். ஆவிக்குரிய விதத்தில் இப்படி வசனம் மழையாக பொழிவது தான் மாரி காலம். இந்த மாரிகாலம் இரண்டு விதத்தில் இருக்கும். முன்மாறி, பின்மாறி என்று இருக்கும். இதற்கு என்ன அர்த்தம்? பழைய ஏற்பாட்டு சத்திய வசனமாகிய மழை அதன் பெயர் முன்மாறி. இரண்டாவது பிரிவு புதிய ஏற்பாட்டு உடன் படிக்கை சத்தியவசனமாகய மழை அதன் பெயர் பின்மாறி. இங்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து சொல்கிறது என்னவென்றால், உன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையின், கிருபையின் காலம், பின்மாறி காலம், மற்றும் சபையின் காலம் இதோடு முடிவடைகிறது. இனி ஏழு வருட உபத்திரவ காலம் ஆரம்பமாகும்.
மழைபெய்து ஒழிந்தது என்பதன் பொதுவான அர்த்தம் என்னவென்றால், புயல் போன்ற வாழ்க்கையில் இனி உனக்கு அமைதி உண்டாகப் போகிறது என்று இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து கூறுகிறார். மேலும் மழை பெய்து ஒழிந்தது என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்றால், தேவ வசனமாகிய மழை நிறுத்தப்படுவதை குறிக்கிறது. கிருபையின் காலம் முடிவுக்கு வருகிறது என்றும் குறிப்பிடுகிறது. அதாவது மழை பெய்து ஒழிந்தது என்பது வசன பஞ்சம் உண்டாவதைக் குறிக்கிறது. துர் உபதேசங்களும், செழிப்பின் உபதேசங்களும் பெருகி சத்தியம் சத்தியமாக போதிக்கப்படாத சூழ்நிலையைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட காலத்தையெல்லாம் நீ கடந்து விட்டாய் என்று இயேசு கிறிஸ்து சபையை பார்த்து கூறுகிறார்.
இன்று இதை வாசிக்கிற உங்களைப்பார்த்து கூறுகிறார்
குறிப்பு வசனம்: பிரசங்கி 3: 4, ஏசாயா 40: 2, ஏசாயா 54: 6-8
Write a public review