உன்னதப்பாட்டு 1 : 5
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 1 : 5

“எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.”

"எருசலேமின் குமாரத்திகளே!” என்பது பழைய ஏற்பாட்டின் படி இஸ்ரவேல் ஜனங்களையும், புதிய ஏற்பாட்டின் படி சபையையும் குறிக்கும். இங்கு கறுப்பு என்பதற்கு இரண்டு (கேதாரின் கூடாரம், சாலொமோனின் திரை) அடையாளங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. இஸ்மவேலின் இரண்டாம் மகனாகிய கேதார் வம்சத்தார் (ஆதி 25 : 13, 1நாளா 1 : 29) கட்டின கூடாரங்களையும் அதன் கருமையையும், சாலொமோனின் கருமையான திரைகளையும் ஒப்பிடுகிறார். மேலும் ங்கே கருப்பு என்பது ஒரு வெறுக்கப்படுகிற நிலைமையை குறிப்பிடுகிறது.

   புறஜாதியாரில்   இருந்து வந்த விசுவாசிகள் தாங்கள் சபையின் பார்வைக்கு கருப்பா இருந்தாலும், ஆண்டவர் தங்களை அழகாக்கி விட்டார் என்று கூறுவதை   இங்கே பார்க்கலாம். எப்படிப்பட்ட அழகு? 1 பேதுரு 3:4. இல் சொல்லப்பட்டு இருக்கிற "அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது;  அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.” அழகை குறிப்பிடுகிறது.

தேவன் எங்களை  இழுத்துக் கொண்டபடியால், அழகாகி விட்டோம் என்று மணவாட்டியாகிய சபை அழகாக சொல்லுகின்ற ஒரு கவிதை நடை இது.

இன்று நீங்கள் கர்த்தருக்குள் எப்படி இருக்கிறீர்கள்?


குறிப்பு வசனம் : லூக் 9 : 23, சங் 91 : 1




  :   22 Likes

  :   111 Views