"என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.”
"எங்கேதி” போன்ற வனாந்தரமான ஒரு உலக வாழ்க்கை சபைக்கு இருந்தாலும், இயேசு கிறிஸ்துவினால் செழிப்பான பூக்கள் சபையாகிய விசுவாசியின் ஆத்துமாவில் காணப்படுகிறது என்பதை தான் இந்த வசனம் குறிப்பிடுகிறது. அதாவது மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பினால் உண்டாகும் ஆறுதல், ஆத்தும குணம் இதுதான் சபையாகிய கிறிஸ்தவர்களின் ஆத்மாவிலே கனி கொடுப்பதற்கு முன்பாக வெளிப்படும் பூக்கள். இதைதான் சபை கூறுகிறது, என் நேசராகிய இயேசு கிறிஸ்து "எங்கேதி” போன்ற பாலைவன வாழ்க்கையிலும், என் ஆத்துமாவில் முளைக்கிற மருதோன்றிப் பூங்கொத்தாக இருந்து வாசனை கொடுக்கிறார் என்பதாக மகிழ்ச்சியாக இந்த பாடலை பாடுகிறார்கள்.
"எங்கேதி” (என்கேதி) என்பது ஒரு இடம் (1சாமு 23 : 29, 1சாமு 24 : 1). தாவீது, சவுலுக்கு பயந்து ஓடிய இடமாகும். இந்த இடம் ஒரு பாலைவனமான இடமாக இருந்தாலும் திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த ஒரு செழிப்புள்ளப் பகுதி. உள்ளே சென்றால், அழகான நீர்வீழ்ச்சிகள் மேலே தொடங்கியப்படி அப்படியே விழுந்து அப்புறம் அது ஒரு சின்ன ஓடையாக ஓடி மறுபடியும் விழுந்து ஒரு நான்கைந்து நீர்வீழ்ச்சிகளை கொண்டதாக இருக்கிறது.
இந்த வசனம் இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் இருந்து வந்து எங்கள் ஆத்துமாவிலே இன்று வாசனை கொடுக்கிறவராக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. யோவான் 15 : 1 -ல் பிதா திராட்சைத் தோட்டக்காரராகவும், இயேசு கிறிஸ்து திராட்சைச் செடியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இயேசு கிறிஸ்து இன்று திராட்சைத் தோட்டத்தில் முளைக்கின்ற மருதோன்றிப் பூங்கொத்தாக இருந்து இன்று அவரை நம்புகிற எல்லோருடைய வாழ்விலும் வாசனைக் கொடுப்பவராக இருந்து எங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று இந்த வசனம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது.
நீங்கள் வாசனை வீசுகிறவர்களாக மாற்றப்பட்டு இருக்கிறீர்களா?
குறிப்பு வசனம் : யோசுவா 15: 62, 1சாமு 23: 29, 1சாமு 24: 1
Write a public review