உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக

எபேசியர் 6:3. "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது".

பெற்றோரை கனப்படுத்துவது தேவன் அருளிய கட்டளைகளில் முக்கியமானது. இது பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் சொல்லப்பட்டிருக்கிற மிக முக்கியமான ஒரு கற்பனை.

இன்று இளைஞர்கள் ,குறிப்பாக திருமணத்திற்கு பிறகு பல கனவுகளோடு வளர்த்த பெற்றோரை தனித்து விட்டுவிடும் வாலிபர்கள் ஏராளம். அதை நவீன அந்தஸ்தாக எண்ணுகின்ற வாலிபர்கள் ஏராளம்.

பெற்றோரின் கட்டுப்பாடு வளையத்தை விட்டு கணவன்-மனைவியாக இணைந்து யோசித்து செயல்படுவது தவறல்ல. ஆனால் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் அவர்களை தனித்து விலக்கிவிடுவது தவறு .இந்த பூமியிலே அதிக நாள் உயிர் வாழ்வதற்கு நமது பெற்றோரை நாம் கனப்படுத்தவேண்டும். இது தேவன் நமக்கு கொடுத்த கட்டளை. வாலிபர்களே, கர்த்தருடைய சித்தத்தை செய்வோம். அவருடைய கட்டளைக்கு நாம் கீழ்ப்படிவோம். ஆசீர்வாதத்தை பெறுவோம். ஆமென்.





  :   26 Likes

  :   95 Views