உண்மையான வழி
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உண்மையான வழி

சங்கீதம் 128;1. "கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்."  

தேவனுக்கு உரிய மரியாதையையும், கனத்தையும், மகிமையையும் அளித்து அவருடைய வழிகளில் நடந்தால், நாம் தேவனால் ஆசீர்வதிக்கப் படுவோம். இதனை எத்தனை முறை போதித்தாலும் அநேகர் இதை ஏற்று செயல் படுவதில்லை.  

ஆலயத்திற்கு செல்ல வேண்டும், காணிக்கை கொடுக்க வேண்டும், ஜெப கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும், அப்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப் படுவீர்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.ஏனென்றால் காணிக்கை கொடுப்பதோ, ஆலயத்திற்கு செல்வதோ மிக எளிதானவை;  ஆனால் தேவ வழியில் நடப்பது தான் கடினம். ஆகையால், கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடந்து காட்டும் அனுபவத்திற்கு முக்கியத்துவம் தரதயங்குகிறார்கள். 

அவர் வழியில் நடக்க நாம் முக்கியத்துவம் கொடுப்போம். அதுவே நமது வாழ்வின் செவ்வையான வழி. ஆமென். ',





  :   31 Likes

  :   100 Views