மிகவும் வேதனையான சூழ்நிலையில் கை, காலில் ஆணி அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தி கொண்டு இருக்கிறது. அந்த நிலையில் இயேசு பேசினார், என்ன பேசினார் நமக்காக பேசினார்.
லூக்கா 23 : 34
பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள். தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறதை பார்க்கிறோம்.
ஏசாயா 53 : 12
அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. சிலுவையில் இருக்கும் போது நமக்காக பரிந்து பேசுகிற பிரதான ஆசாரியனாக பார்க்க முடிகிறது. மனிதனுடைய இரட்சிப்புக்காக ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது. உபத்திரவத்திலே ஜெபிக்கிறவராக பார்க்க முடிகிறது. பிதாவுக்கு நீதிக்கான விலை கொடுத்தார். மறுகுலத்திற்கு மீட்பும் மன்னிப்பும் கொடுத்தார். வேதனை மத்தியில் மன்னித்தார். உலகத்தை அழிக்க அல்ல இரச்சிக்கவே வந்தார் என்பது விளங்குகிறது.
யாரை மன்னித்தார்
சதுசேயர், பரிசேயர் - மன்னித்தார்.
வேதபாரகர்கள் - அவர்களை மன்னித்தார்
பேதுரு - மறுதலித்தான் - அவனை மன்னித்தார்
யூதாஸ் - காட்டி கொடுத்தான் - அவனை மன்னித்தார்
பிலாத்து - நிருபராதி என்று அறிந்தும் சாவுக்கேதுவான தண்டனை கொடுத்தார் - அவனை மன்னித்தார்.
போர்சேவகர்கள் - அடித்து துன்புறுத்தி உடையை பங்கிட்டார்கள் அவர்களை மன்னித்தார்.
வழிபோக்கர்கள் - இயேசுவை தூற்றினார்கள் - மன்னித்தார்
சீஷர்கள் - விழித்திருந்து ஜெபிக்கவில்லை - அவர்களை மன்னித்தார்
ஒரு திருடன் - அவரை நிந்தித்தான் - அவனை மன்னித்தார்.
அவர் மன்னித்ததீனால் - ரோம போர் சேவகர்கள், நூற்றுக்கு அதிபதி கர்த்தரால் தொடப்பட்டார்கள்
(மத்தேயு 27 : 54)
மன்னிப்பின் சிகரமாக விளங்கிய நம் ஆண்டவர் பல உவமைகள் மூலம் அதை மக்களுக்கு விளக்கினார். ஜெபம் பண்ண கற்று தாரும் என்று கேட்ட போது மன்னிப்பை குறித்து சொல்கிறார். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு 5 : 44 பகைவர்களுக்காக பிதாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர்களை அழித்து விடுவார் என்பதை அவர் அறிந்திருந்தர்.
எண்ணாகவும் 16 : 23 - 33 மோசேக்கும், ஆரோனுக்கும் எதிரான கோராகு, தாத்தான், அபிராம் எழும்பினார்கள். பூமி தன் வாயை திறந்து அவர்களை விழுங்கிபோட்டது. இந்த வார்த்தை இன்று நமக்கு சொல்வது. இன்று யாரை மன்னிக்கிறார்.
அவர் சிலுவையில் நமக்கு கொடுக்கும் விலையேற பெற்ற ஆசீர்வாதம் மன்னிப்பு, இன்றும் அவரை நோக்கி பார்க்கும் போது அவர் நம்மை மன்னிக்கிறார். (1 யோவான் 1 : 9)
மத்தேயு 6 : 14 (நாம் மற்றவர்ககளை மன்னிக்கும் போது பிதா நமக்கு மன்னிக்கிறார்.) கொலோ 3 : 13 ( கிறிஸ்து மன்னித்தது போல, நாம் மன்னிக்க வேண்டும்.)
Final: பாவம் அழிக்கப்பட வேண்டும். அதே வேலையில் பாவிகள் மீட்கப்பட வேண்டும். பழிதீர்த்தல் தவிர்க்கப்பட்டு பாவ மன்னிப்பும், ஒப்புரவாகுதலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவை வெற்றியின் மூலம் பழிதீர்த்தல் எனும் கொடும் பாவம் சிலுவையில் அறையுண்டது.
மன்னிப்பு என்றும் பெரிய சித்தாந்தம் சிலுவையில் வெற்றி பெற்றது. நாமும் பழி தீர்க்கும் சிந்தனையை சிலுவையில் அறைந்து மன்னிக்கும் மனப்பான்மையை ஏற்று வாழ முயலுவோமாக.
Write a public review