இரக்கம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



இரக்கம்

"இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." [மத்தேயு:5:7].  

நம்முடைய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் பாவத்தில் மரித்து போயிருந்த நம்மை தம்முடைய சொந்த இரத்தத்தினால் மீட்டு தம்முடைய சொந்த பிள்ளைகளாய் நம்மை மாற்றினார். இதை உணர்ந்தவர்களாய் நாமும் பிறருக்கு இரக்கம் காண்பிக்க வேண்டும்.   கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் அன்பை உணர்ந்தவர்களாய் இரக்கம் காண்பிப்போம்.  

அதுமட்டுமல்லாமல் ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம் மற்றவர்களுக்கு இரங்கும் போது தேவன் நமக்கும் இரக்கம் காண்பிக்கிறார்.  

நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக என்று வேதம் கூறுகிறது. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; ஏன்  என்றால், அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்று இயேசுகிறிஸ்து நமக்கு போதித்துள்ளார். 

வேதம் கூறுகிறது இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும் [யாக்கோபு:2:13].  நாமும் பிறருக்கு இரக்கத்தை காண்பிப்போம். நாமும் தேவ இரக்கத்தை சுதந்தரித்துக் கொள்ளுவோம். ஆமென். 






  :   54 Likes

  :   132 Views