இயேச கிறிஸ்துவால் மீட்கப்பட்டவர்கள்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



இயேச கிறிஸ்துவால் மீட்கப்பட்டவர்கள்

"நம்மை மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத ரத்தம் சிந்தப்பட்டது. ஒரு அடிமையை மீட்பதற்கு அவனுக்கு உரிய விலையைக் கொடுத்து மீட்க வேண்டும். அதேபோல் நம்மை மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத ரத்தம் சிந்தப்பட்டது. இதை அடிக்கடி நினைத்து நன்றி உள்ளவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்". 

இயேசு கிறிஸ்துவால் மீட்கப்பட்டவர்கள்  

1 பேதுரு 1:19.  "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே." 

ஒரு அடிமையை மீட்பதற்கு அவனுக்கு உரிய விலையைக் கொடுத்து மீட்க வேண்டும். அதேபோல் நம்மை மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத ரத்தம் சிந்தப்பட்டது. இதை அடிக்கடி நினைத்து நன்றி உள்ளவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.தேவன் தனது சொந்த குமாரனை கொடுக்கும் அளவிற்கு தேவனுடைய பார்வையில் மனிதன்  இருக்கிறான். கிறிஸ்துவின் இரத்தத்தை சிந்தும் அளவிற்கு,  ஆவியானவர் மனிதனுக்குள் வாசம் செய்யும் அளவுக்கு மனிதனை மதிப்புள்ளவனாக தேவன் படைத்தார். 

கிறிஸ்து பல பாடுகளை சகித்து , ஆவியை விடும் அளவிற்கு மனிதனின் ரட்சிப்பு முக்கியம் வாய்ந்தது. அதை ஒரு நாளும் நாம் அசட்டை செய்யக்கூடாது. கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் நன்றியுணர்வோடு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்வோம். ஆமென். 





  :   26 Likes

  :   117 Views