இயேசு கிறிஸ்துவின் அன்பு
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



இயேசு கிறிஸ்துவின் அன்பு

நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை (மத்தேயு 8:20). 

நம்மால், ஆவிக்குரிய அநேகக் காரியங்களை முழுமையாய் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. விழுந்துப்போன மனிதனுக்குரிய தன்மையினால், உன்னத தேவனுடைய அநேக செயல்களை விளங்கிக்கொள்ளமுடிவதில்லை. அதில் ஒன்று தேவனுடைய அன்பு; மன்னிக்கும் அன்பு, தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த அன்பு. ஒரு பாவியை இந்த அளவு தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தரும் நேசிப்பது என்பது எப்படி முடிந்தது? இந்த அன்பினிமித்தம் தேவ குமாரனாகிய அவர் பரலோகத்தின் மேன்மையை விட்டு பூமிக்கு வந்தது. 

 தேவன், இரட்சிப்பை நிறைவேற்றுபடியாக தன்னை முற்றிலும் தாழ்த்த வேண்டியிருந்தது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தம்மைதாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். இந்த உலகில் ஏழையாய், வறியவராய் தன்னைத் தாழ்த்தவேண்டியிருந்தது .  

கிறிஸ்துவின் இவ்விதமான அன்பு நம்மை ஆழமாய்த் தொடவில்லையென்றால் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அழைப்பது எப்படி சரி என்று எண்ணுகிறீர்கள்? பவுல் கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது என்று சொல்லுகிறார் மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை. இந்த உலகம் அவருடையது. அவரே சகலத்தையும் உண்டாக்கினவர். அவர் இந்த உலகத்தில் அந்நியராய் வாழ்ந்தார். தாழ்மையின் பாதையைத் தெரிந்துகொண்டார். நாம் இந்த அன்புக்கு என்ன பதில் சொல்லபோகிறோம்?ஆமென்.  





  :   35 Likes

  :   110 Views