இயேசு கிறிஸ்துவோடு உள்ள உறவு
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



இயேசு கிறிஸ்துவோடு உள்ள உறவு

லுக்கா  8:21. "அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்."  

இயேசு கிறிஸ்துவே உறவின் முறையை குறித்து அழகாக சொல்லித் தருகிறார். அவருடைய வார்த்தையை கேட்டு அதன்படி நடக்கிறவர்கள் அவரது தாயும் சகோதரரும் ஆக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார். அநேகருக்கு கர்த்தருடைய வசனம் தெரியும் ஆனால் அதன்படி நடக்க ஒப்பு கொடுப்பதும் இல்லை, முயற்சிப்பதும் இல்லை. 

வசனம் என்பது கர்த்தருடைய வார்த்தை. அவருடைய வார்த்தையினால் இன்று இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது , பூமி சுற்றிக் கொண்டிருப்பது. வேதத்தில் உள்ள அவருடைய வார்த்தைக்கு அத்தனை வல்லமை உள்ளது. 

கர்த்தருடைய வல்லமையுள்ள வார்த்தையை நாம் நமக்குள் பெற்று,  அதற்கு நாம் கீழ்ப்படியும் போது அவருடைய வல்லமை நமக்குள் கிரியை செய்யும்; அவரோடு நாம் ஐக்கியமாக  முடியும். அப்பொழுது தான் அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற புத்திர சுவிகாரம் நமக்கு கிடைக்கிறது.நாம் கிறிஸ்துவோடு உள்ள உறவில் பலப்பட்டு, பரலோக ராஜ்யத்தின் பலனை அனுபவிப்போம். ஆமென். ', 





  :   28 Likes

  :   108 Views