இடுக்கமான வாசல்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



இடுக்கமான வாசல்

மத்தேயு 7:13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்;   

எதையுமே சுலபமாக அடைய வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக எல்லோரிடமும் இருக்கும். சிரமப்பட்டு வெற்றி அடைவதை யாரும் விரும்புவதில்லை. பிரயாசம் இல்லாமலேயே செழிப்புஅடைய வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. மிகுந்த சிரமப்பட்டு ஆட்சி பீடத்தில் இருந்த தாவீது அதை கடைசி வரைக்கும் காத்துக் கொண்டான். சுலபமாக ராஜ பதவி பெற்ற யரேபெயாம் அதை சரியாக தக்க வைக்க இயலாமல் போனான். 

இயேசு கிறிஸ்து இடுக்கமான வாசல் வழியாக பிரவேசியுங்கள் என்றார்.  வாழ்க்கையில் ஒன்றை பெறுவதைவிட அதனைப் பெறுவதற்கு ஏற்பட்ட சிரமங்களில் பெற்ற அனுபவங்கள் தான் மிக முக்கியம். 

தேவன் நினைத்தால் நம்மை சுலபமாக ஆசிர்வதிக்க முடியும் . ஆனால் அவர் நம்மை எல்லா சூழ்நிலைகள் வழியாக நடத்தி நம்மை ஆசீர்வதிக்கிறார். கடினமான சூழ்நிலைகளின் பின்னாலும் தேவன் இருக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும். ஆமென். 





  :   28 Likes

  :   113 Views