அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?

 ஒருவருடைய வாழ்க்கையின் ஆரம்பம் அற்பமாகக் காணப்படலாம். ஆனால் தேவன் அதை அசட்டைப் பண்ணக்கூடாது என்று சொல்லுகிறார். ஒருவேளை மற்றவர்கள் உங்களைப் பார்த்து அசட்டையாக எண்ணலாம் . நாம் தேவனோடு இருக்கும்பொழுது சோர்ந்து போகவேண்டிய அவசியமில்லை.  தேவ மனிதனின் ஆரம்பம் மிக சிறியதாக இருந்தாலும், சிறியவர்கள் மேல் அவர் கரிசனை உள்ளவராய் இருக்கிறார். ஆனால் அதனுடைய முடிவோ மகிமையான ஒன்று. 

ஆகவே தான் வேதம்,உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்  (யோபு 8:7)  என்று சொல்லுகிறது. கர்த்தருடைய பிள்ளையின்  முடிவானது பரிபூரணமாக இருக்குமென்று சொல்லுகிறார். ஆகவே கர்த்தர் கொடுத்திருக்கிற எளிமையான காரியத்திலும் உண்மையாய் இருப்போம்.  முழுமனதுடன் அதை செய்வோம், கர்த்தர் அதை சம்பூரணப்படுத்துவார்.  

ஒரு மெய்யான தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கை நாளுக்கு நாள் கர்த்தரால் பிரகாசிக்கப்பட்டும், சீர்படுத்தப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு தேவனுடைய பரிபூரணத்தை நோக்கி வழிநடத்தப்படும். அது பரிபூரணம் நிறைந்த ஒரு முடிவாகக் காணப்படும். இந்த உலகின் கடைசி நாள் வரைக்கும் அவனை உருவாக்கி, பெலப்படுத்தி, பரிசுத்தப்படுத்தி சீர்படுத்திக் கொண்டே இருப்பார். ஆகவே நாம் நம்முடைய வாழ்க்கையைக் குறித்து அற்பமாகவோ அல்லது அசட்டையாகவோ எண்ணிவிட வேண்டாம். கர்த்தர் நிச்சயமாக நம்மை ஒருபோதும் கைவிடார். ஆமென். 





  :   35 Likes

  :   144 Views