Sermons

உன்னுடைய பெலன் எது தெரியுமா?

ஒரு கிறிஸ்தவனுடைய பெலன் என்பது சரீர பெலன் அல்ல, தங்களுக்கு இருக்கும் வசதிகள் அல்ல, ஒருவேளை ஒரு உயர் பொறுப்பில் இருந்தாலும் அந்த பொறுப்பு அல்ல, பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தால் அது அல்ல, ஒருவேளை அனேக ஆட்களுடைய உதவிகள் ஆள் பெலன்கள் இருந்தால் அதுவும் அல்ல, எது தான் ஒரு கிறிஸ்துவினுடைய பெலன், கர்த்தருடைய வார்த்தையை வெளிப்படுத்துவது தான் ஒரு கிறிஸ்துவினுடைய பெலன். இது அநேக பேருக்கு தெரிவதில்லை உணர்வதும் இல்லை. ஒரு பொய்யான நினைவிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களிலே தேவனுடைய வார்த்தையை பயன்படுத்தி தான் அவர் எல்லாவற்றையும் ஜெயம்கொண்டார். அவர் பிசாசுகளை விரட்டுவதற்கு தன்னுடைய சரீர பெலனை அவர் பயன்படுத்தவில்லை, வார்த்தையினாலே அதிகாரத்தோடு கட்டளையிட்டார். அப்படி என்றால், இன்று கிறிஸ்துவை பின் தொடர்கிற நாமும் வார்த்தையை அதிகாரத்தோடு சொல்லி வெற்றி பெற வேண்டும். ஆம் இதுதான் ஒருவனுடைய பெலன், இதைப் பெற்றுக் கொள்வதற்கு வேதம் சொல்கிறது பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,....., எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” (அப்போஸ்தலர் 1:8) என்று கூறுகிறது. 

ஆம், இந்த பெலன் நம்மிடம் வரும் பொழுது இந்த மலையைப் பார்த்து அப்புறம் போ என்று சொன்னால் அது போகும், இதுதான் வேதத்திலே நமக்கு ஆண்டவர் சொல்லியிருக்கிறார். சாதாரண ஒரு மனிதனால் 50 கிலோ தூங்குவது கஷ்டம் பரிசுத்த ஆவியானவர் வரும் பொழுது  நீங்கள் வாயினால் அறிக்கை பண்ணுகிற பொழுது மலையையும் பிளக்க முடியும்மோசே கையில் இருந்த  கோலை நீட்டினபொழுது சமுத்திரம் இரண்டாக பிளந்தது எந்த மனிதனாலும் முடியும். கர்த்தருடைய வல்லமையினால் ஒரு மனிதன் இயங்குகிற பொழுது இது சாத்தியம்பரிசுத்த ஆவியானவருடைய பெலத்தை பெற்று நாம் ஓடுவோம். ஒருவேளை சரீர பெலவீனங்கள் குறைவுகள் இருந்தாலும் ஆண்டவர் எல்லாவற்றையும் சரி செய்து உங்களை வல்லமையாக பயன்படுத்து முடியும். கர்த்தருடைய அதிகாரமுள்ள வார்த்தையை பெற்று, நாம் அதிகாரம் உடையவர்களாக மாறி செயல்படுவோமானால், நீங்கள் தான் இந்த உலகத்தின் பலசாலிகள்.

Loading...