கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே சில நேரங்களில் நம் மனதிற்குள் ஒரு கேள்வி வரலாம், கர்த்தாவே இவர்தான் என்னுடைய துணையா இவர்தான் நீங்கள் எனக்காக வைத்திருப்பவரா என்று நம் வாழ்க்கையில் யாராவது வரும்போது இது தேவனால் தான் நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆசை வரும். ஆம் என்கிற சத்தம் பரலோகத்திலிருந்து வந்தால் நல்லா இருக்கும் என்று நினைப்போம். ஆனால், தேவன் பேசும் விதம் அது அல்ல. அவர் பெரும்பாலும் அமைதியில் பேசுகிறார். அந்த அமைதி நமக்கு ஒரு சமாதானத்தை தரும்.
முதலாவது, காரியம் மனதை நிறைவாக்கும் சமாதானம். பிலிப்பியர் 4:7 ஆம் வசனத்தில் “அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்”. தேவன் தரும் உறவு நம்மை பதட்டப்படுத்தாது, குழப்பமாக்காது. அது ஒருவிதமான அமைதியை தரும். நம் உள்ளத்திற்குள் சொல்வது இது சரியானது என்று நம் இருதயத்தில் தோன்றும். வாழ்க்கையில் சவால்கள் வரலாம், ஆனால் அந்த உறவுக்குள்ளே பாதுகாப்பு இருக்கும். ஒரு எளிய எடுத்துக்காட்டை பார்க்கலாம். அவரை சந்திக்கும் முதல் நாளிலேயே என் மனதுக்குள் ஒரு அமைதி கிடைத்தது. அவர் தேவனுக்கு பயப்படுகின்றவர் என்பதால் தான் அந்த அமைதி. மனித அன்பு தற்காலிகமாக இருக்கலாம் ஆனால் தேவன் ஏற்படுத்தும் அன்பு நிலைத்திருக்கும்.
இரண்டாவது காரியம் தேவனுக்கு அருகில் கொண்டு போகும் உறவு தேவன் அனுப்பும் ஒருவர் உங்களை தேவனிடம் மேலும் அருகில் கொண்டு செல்வார். அவர் உங்களை ஜெபிக்க ஊக்குவிப்பார். வேதாகம் வாசிக்க நினைப்பூட்டுவார் உங்கள் விசுவாசத்தை வளர்ப்பார் குறைக்க மாட்டார். ஆமோஸ் 3:3-வது வசனத்தில் “இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?”, ஒரு எளிய எடுத்துக்காட்டை பார்க்கலாம். உங்களுக்கு கணவனாக அல்லது மனைவியாக வரப்போகிறவர்கள் உங்களை தேவ ஆலயத்திற்கு போகக்கூடாது என்று சொன்னால் அந்த துணை தேவனிடமிருந்து வந்தது அல்ல, தேவன் தரும் துணை உங்களின் ஆன்மீக வாழ்க்கையை பாதுகாக்கும்.
மூன்றாவது காரியம் உங்களின் நோக்கத்தை காண்பவர். யார் வேண்டுமானாலும் உங்களின் அழகையும், புன்னகையும் ரசிக்கலாம். ஆனால் தேவன் அனுப்பும் ஒருவர் உங்கள் வாழ்க்கையின் அழைப்பையும் பணியையும் பாதுகாப்பார். அவர் உங்களை ஊக்குவிப்பார். உங்களின் கனவுகளுக்கு ஆதரவு கொடுப்பார். நீதிமொழிகள் 27:17-வது வசனத்தில் “இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.” ஒரு எளிய எடுத்துக்காட்டை பார்க்கலாம். ஒரு கணவன் தன் மனைவிக்கு பாடும் திறமை இருப்பதை கவனித்தார். அவர் சொன்னார் நீ தேவாலயத்தில் பாட ஆரம்பி என்று, இன்று அவள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறாள்.
தேவன் தரும் துணை உங்களை சிறையில் வைக்க மாட்டார்கள். உங்களை உயர்த்துவார்கள். முடிவாக உங்களை ஊக்குவிப்பார். ஒன்றாவது காரியம் உங்களுக்கு அமைதி தருபவர். இரண்டாவது காரியம் தேவனுக்கு அருகில் கொண்டு செல்பவர். மூன்றாவது காரியம் உங்கள் நோக்கத்தை ஆதரிப்பவர். ஜெபியுங்கள் தேவனிடம் உறுதியாக கேளுங்கள். நீங்கள் திருமணமாகாமல் காத்திருக்கிறீர்கள் என்றால் அவசரப்பட வேண்டாம். தேவன் தருவது சரியான நேரத்தில் சரியான துணையை தருவார். சங்கீதம் 37:4வது வசனத்தில் “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.” தேவன் உங்களோடிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.