வாலிபனே எழுந்திரு
(லூக்கா 7:14):
இன்று வாலிபர்கள் எப்படிப்பட்ட சூழலில் இருந்து எழும்ப வேண்டும். அநேகர் ஏதோ ஒரு சூழலிலே விழுந்திருக்கிறார்கள். ஆனால் எழும்ப முடியாமல் இருக்கிறார்கள். யார் ஒருவர் விழுந்தாலும் அவர்கள் எழுந்திருப்பதற்கு ஒரு உதவி வேண்டும். இன்று வாழ்க்கையில் விழுந்து போன சூழலிலே இருப்பவர்களுக்கு மனித உதவிகளை விட கர்த்தருடைய உதவி தான் மிகவும் அவசியமானது. அந்த உதவியை நோக்கி பார்ப்பவர்களுக்கு இன்று வெற்றி நிச்சயம்.
என் சகோதரர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன், பொல்லாத சிந்தையை கீழே போடுங்கள்! கவலையை கீழே போடுங்கள்! போதைப்பொருளை கீழே போடுங்கள்! கர்த்தரின் வார்த்தையை எடுங்கள்!
ஒரு மனிதன் அதிகமான பாரத்தையும், கஷ்டங்களையும் சுமந்திருக்கும் பொழுது அவரால் எழும்ப முடியாது. எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் அதிகமான சுமையை தலையில் வைத்துக்கொண்டு கீழே உட்கார்ந்து இருந்தால் அவரால் எழும்ப முடியாது அதே மனிதன் சுமை இல்லை என்றால் ஈசியாக எழும்பி விடுவார். அதேபோல் தான் இன்று பிரச்சனை, கவலை போன்ற சுமைகளை நாம் தூக்கி சுமக்கிறப் பொழுது நம்மால் எழும்ப முடியாது.
1) பாவத்திலிருந்து
எழுந்து
சில நேரங்களில் வாழ்க்கையில் நாம் சிக்கித் தவிக்கிறோம், ஜெபத்தை வெறுமையாக உணர்கிறோம், பாவம் நம்மை கீழே இழுக்கிறது, அல்லது நாம் நம்பிக்கையை இழக்கிறோம்.
முழுமையான மனமாறுதல் வேண்டும்: லூக்கா 15:11-32-ல் காணப்படும் உவமையில் "இளைய மகனைக்" குறிக்கிறது. தன் தந்தையிடமிருந்து சொத்தில் தனக்குக் கிடைக்கும் பங்கைக் கேட்டு, வெளியேறி தனது பணத்தையெல்லாம் வீணடித்த பிறகு, அவர் வறுமையில் தனது தந்தையிடம் திரும்பும் போது, அவர் இருகரம் நீட்டி வரவேற்கிறார். மனந்திரும்புபவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மன்னிப்பைக் குறிக்கும் விதமாக, அவரது தந்தை மகிழ்ச்சியடைகிறார்.
அந்த இளைஞன் தன்னை எழுப்ப முடியாதது போல, ஆன்மீக ரீதியாகவும் நம்மை நாமே உயிர்ப்பிக்க முடியாது. நம் சொந்த பலத்தை நம்புவதற்குப் பதிலாக, கிறிஸ்துவின் வார்த்தை நமக்குள் பேச அனுமதிக்க வேண்டும். வேதத்தைப் படிப்பது, நற்செய்தியைக் கேட்பது மற்றும் ஜெபம் அவருக்கு உயிர் கொடுக்கும் சக்தியை அளிக்கிறது. மத்தேயு 9:5-7 இல் இயேசு கிறிஸ்து ஒரு திமிர்வாதக்காரனுடைய பாவத்தை மன்னிக்கும் பொழுது அவன் நோயிலிருந்து சுகம் பெற்று எழும்பி உற்சாகமாக செல்கிறதை பார்க்க முடிகிறது. “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபேசியர் 1:7).
2) விரக்தியிலிருந்து எழுந்து:
வாழ்க்கை தாங்க முடியாததாக உணரும்போது, இயேசு தொலைவில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவர் இரக்கத்தால் நெகிழ்ச்சியடைகிறார். நேர்மையாக ஜெபிக்கவும், அவர் உங்கள் துக்கத்தை உணர்கிறார் என்று நம்பவும் வேண்டும். கர்த்தர், எலியாவின் சோர்வுநிலையை உணர்ந்து, அவருக்கு ஒரு தேவதூதனை அனுப்புகிறார். அந்தத் தூதன் எலியாவை எழுப்பி, அவரிடம் உணவு கொடுத்து, "நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்"(1 இராஜாக்கள் 19:7) என்று கூறுகிறார். இது எலியாவுக்குத் தேவையான உடல்ரீதியான மற்றும் ஆன்மீகப் பலத்தைக் கொடுக்கிறது.
முக்கிய கருத்துக்கள்:
உதவி மற்றும் ஊக்கம்: எலியா மனச்சோர்வடைந்திருந்தபோது, கர்த்தர் அவரை தனியாக விடவில்லை. ஒரு தூதன் மூலம் அவருக்கு உதவினார். நாம் சோர்வாக இருக்கும்போது தேவன் நமக்கு உதவி செய்வார் என்பதை இது காட்டுகிறது.
எதிர்காலத்திற்கான தயாரிப்பு: தூதன், "நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்" என்று கூறியது, இன்னும் செல்ல வேண்டிய நீண்ட தூரம் உள்ளது என்பதையும், அதற்குத் தேவையான பலமும் உணவும் அவசியம் என்பதையும் குறிக்கிறது. இது நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கிறது.
தேவனுடைய பலம்: எலியாவுக்கு தூதன் கொடுத்த உணவு, அவரை பலப்படுத்தியது. அதுபோலவே, தேவன் நமக்குத் தேவையான பலத்தையும், உணவையும் கொடுக்க வல்லவராயிருக்கிறார், நாம் அவரிடம் வேண்டியதை கேட்கலாம், அவர் நம் தேவைகளை சந்திக்கிறார்.
அர்ப்பணிப்பும் தொடர் ஓட்டமும்: இந்த வசனம், நம்முடைய சவால்களின் மத்தியிலும் தேவனுடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. "எழுந்திரு" என்பது நம்மை செயலற்ற நிலையில் இருந்து விடுபட்டு, தேவனுடைய காரியங்களை நோக்கிச் செல்லும்படி நம்மை அழைக்கிறது.
வேண்டியதை தேவனிடம் பெறுங்கள்: இந்த வசனத்தை மையமாக வைத்து, நம்முடைய தேவைகளையும், சவால்களையும் தேவனிடம் கொண்டு சென்று, அவர் தரும் பலத்துடன் செயல்பட வேண்டும் என்பதைப் பிரசங்கங்கள் வலியுறுத்துகின்றன.
3) புதிய நோக்கத்திற்கு
எழுந்திருங்கள்:
இயேசு நம்மை ஆன்மீக ரீதியில் உயிர்ப்பிக்கும்போது, அவர் நம் உறவுகளையும், நமது அழைப்பையும், நமது பயனையும் மீட்டெடுக்கிறார். கிறிஸ்துவில் புதிய வாழ்க்கை என்பது உயிர்வாழ்வது மட்டுமல்ல, அர்த்தமுள்ள வாழ்க்கை (II கொரிந்தியர் 5 :17).
உண்மையான மாற்றம்: மனிதர்கள் தாங்களாகவே உருமாற முடியாது. ஆனால், இயேசு கிறிஸ்துவில் மட்டுமே இந்த உருமாற்றம் சாத்தியமாகும். அவர் இறந்தவற்றையும் உயிர்ப்பிக்கும் வல்லமை கொண்டவர், எனவே அவர் நம்மை ஒரு புதிய வாழ்க்கைக்குள் கொண்டுவர முடியும்.
புதிய வாழ்வின் உதாரணங்கள்: மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்வதன் மூலம் பழைய வாழ்வின் செயல்கள் மாறுகின்றன என்பதற்கு உதாரணம், திருடிய பணத்தை திரும்பக் கொடுத்த ஒரு நபரின் கதை. இது ஒரு புதிய வாழ்வின் வெளிப்படையான சான்றாக அமைகிறது.
வாழ்வின் நடைமுறை: இந்த புதிய பிறப்புக்கான நம்பிக்கை இருந்தால், அதை ஏற்றுக்கொண்டு, கடவுளின் வல்லமையுடன் வாழ அழைக்கப்படுகிறோம். இது நம்மை பழைய காரியங்களில் இருந்து விடுவித்து, புதிய ஜீவியத்தை வாழ்வதற்கு உதவுகிறது.
முடிவு:
எலாரா என்ற ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையிலே கணவரை இழந்து தன்னுடைய எல்லா வாழ்வாதாரத்தையும் இழந்து விரக்தியாக இருந்த ஒரு நேரத்திலே, தன்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே வாடி போய் இருந்த ஒரு செடியை பார்த்தார்கள் அப்பொழுது அவர்கள் டீ அருந்தி கொண்டிருந்தார்கள் உடனே டீ-க்கு வைத்திருந்த தண்ணீரை அதன் மேல் உற்ற தொடங்கினார்கள். அடுத்த நாள் பச்சையாக வளர்ந்து செழிப்பாக இருந்தது. இதைப் பார்த்த அந்த பெண்மணிக்கு தன்னுடைய வாழ்க்கையிலே ஒரு நம்பிக்கை வந்தது. பாழ் அடைந்து, புல்லடைந்து இருந்த தன்னுடைய வீட்டை சுற்றி உள்ள இடங்களிலே சிறிதாக மண்ணை தோண்டி பீன்ஸ் விதையை போட ஆரம்பித்தார்கள் பிறகு அது வளர்ந்து நிறைய காய்களை அவர்களுக்குக் கொடுத்தது ஒரு பெரிய மகிழ்ச்சி உண்டாயிற்று.
எலாரா ஒரு பிரமாண்டமான, செழிப்பான பண்ணையைத் திட்டமிடுவதன் மூலம் தொடங்கவில்லை, தன் வீட்டை சுற்றின பகுதியை சுத்தம் செய்வதன் மூலம் தொடங்கினார். விரக்தியை எதிர்கொள்ளும்போது, இன்று நீங்கள் நிர்வகிக்கக்கூடிய மிகச்சிறிய நேர்மறையான பணியில் கவனம் செலுத்துங்கள்.