Sermons

உறவுகளிலே தோல்வி அல்லது காதல் தோல்வி

நம் வாழ்க்கையில் ஒரு காரியத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். இருந்தால் ஒரு சுடு நீரில் முட்டையையும் உருளைக்கிழங்கையும் போட்டால். கடினமாக இருந்த உருளைக்கிழங்கு மெதுவாக மாறுகிறது. இலகுவாக தண்ணீர் போன்று இருந்த முட்டை கடினமாக மாறுகிறது. அப்படி என்றால் நாம் சூழலை குறை சொல்லக்கூடாது. ஒரே சூழலில் இரண்டு விதமான காரியங்கள் நடக்கிறது. இன்றைக்கு நாம் நம்முடைய காரியத்தை எப்படி எடுத்துக் கொள்கிறோம் நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படி எடுத்துச் செல்ல போகிறோம் என்பதுதான் முக்கியம். லகுவாக எடுக்கிறோமா? கடினமாக எடுக்கிறோமா? இரண்டுமே சாத்தியம். எது நமக்கு தேவையோ அங்குதான் நமது வெற்றியும், தோல்வியும் இருக்கிறது. நாம் வெற்றியை நோக்கி நமது பார்வை இருக்குமானால் அந்த சூழல் ஒன்றும் இல்லாமல் போய்விடும். அதேபோல தண்ணீரின் மேல் கப்பல் சென்று கொண்டிருக்கிறது எந்த பிரச்சினையும் இல்லை. அதே தண்ணீர் கப்பலுக்குள் வந்துவிட்டால் பிரச்சனை. அதுபோல தான் பிரச்சனைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்குள் பிரச்சனைகள் விட்டால் பிரச்சினை தான், அது அப்படியே கடந்து மேலோட்டமாக சென்றுவிட்டால், அது வெற்றி உள்ள பயணமாக மாறிவிடும்.

"உறவுகளிலே தோல்வி" பற்றி வேதாகமத்தில் 1 கொரிந்தியர் 13:8 இல் "அன்பு ஒருபோதும் ஒழியாது" என்று குறிப்பிடுகிறது. ஒரு உறவு தோல்வியடைந்ததாகத் தோன்றினால், அது வேதாகமத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி உண்மையான, நீடித்த அன்பை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பதை இது குறிக்கிறது. மனவேதனையை எதிர்கொள்ளும்போது, இயேசுவின் அன்பு நிலையானது மற்றும் அசைக்க முடியாதது என்பதைப் புரிந்துகொண்டு, அவரது அன்புக்குத் திரும்புவதை வேதாகமம் ஊக்குவிக்கிறது.

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேதுரு 5:7).

“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவான் 14:27).

Loading...