நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே - உலகத்தில் நடக்கும் போர்(யோனா 4 ஆம் அதிகாரம்):
சிலுவைக்கு நேராகவும் சிலுவை நாதருக்கு நேராகவும் நம் உள்ளங்களை திருப்பும் இந்த புனித வாரத்தில், உலகில் சிலுவைகளை அனுதினமும் சுமந்து கொண்டிருக்கும் மக்களையும் நாம் நினைவுகூர்ந்து பார்க்க அழைக்கப்படுகிறோம். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகள் என்பது ஒரு குறிப்பிட்ட ஜனங்களுக்கு மட்டும் அல்ல, அது எல்லோருக்குமானது. துன்பப்படுத்தப்படுகிற ஜனங்களோடு தன்னை இணைத்துக் கொண்ட இயேசு கிறிஸ்து, அதே ஜனங்களுக்காக தன்னையே துன்பப்படுத்த ஒப்புக்கொடுத்தார். அதுதான் சிலுவை தியானம்.
கிறிஸ்துவின் கண்ணோட்டமும், நாம் தியானிக்க போகிற யோனாவின் நான்காம் அதிகாரமும் எப்படி இந்த மாதிரி போர் சூழல்கள் மற்றும் ஜனங்கள் துன்பப்படுகிறபொழுது அதிலிருந்து மீள்வதற்கு நமக்கு ஆலோசனை கொடுக்கிறது என்பதை நாம் தியானிக்க போகிறோம்.
ஜனங்களை துன்பப்படுத்துவது
- கிறிஸ்துவை துன்பப்படுத்துவது
இயேசுவை துன்பப்படுத்துதல்: “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” ( அப்போஸ்தலர் 9:5) இல் இயேசு கிறிஸ்து சவுலிடம் சொல்லுகிற ஒரு வார்த்தை தான் இது. சவுல் அப்பொழுது கிறிஸ்துவின் சீஷர்களையும், கிறிஸ்தவர்களையும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தார். அப்படியென்றால், ஒடுக்கப்படுகிற ஜனங்களின் துன்பங்களை கிறிஸ்து தன்னோடு இணைத்துக் கொள்கிறார். “அப்பொழுது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்”(மத்தேயு 25:45).
கீழ்ப்படியாமை
- கர்த்தரை துன்பப்படுத்துவது
யோனா இங்கு கீழ்ப்படியாமல் கர்த்தருக்கு எதிர்த்து நிற்கின்றதை, இன்று தேசங்களும் தேவ சித்தத்துக்கு எதிராக தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதற்கு ஒப்பிடலாம். தங்களது சுயநலத்திற்காக பொது ஜனங்களின் அழிவை எதிர்நோக்குகிற தேசத் தலைவர்கள் இந்த யோனாவைப் போல் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
ஓசன்னா(Lord Save us): கர்த்தாவே எங்களை காப்பாற்றும் என்று அர்த்தம். இன்றைக்கு போரினால் பாதிக்கப்பட்ட பொது ஜனங்கள் கூப்பிடுகிற ஒரு கூக்குரலாக இது இருக்கிறது. ஆண்டவரே, போர் மற்றும் மோதல்களின் உலகத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். இன்றைய உலகம் உள்நாட்டு அமைதியின்மை, ஆயுத மோதல்கள் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. மியான்மர், லிபியா, சிரியா, பாலஸ்தீனம், உக்ரைன் போன்ற நாடுகள் மற்றும் நமது நாட்டின் மணிப்பூர் மாநிலம் இவைகளால் பொது மக்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களின் கீழ் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஏனெனில் அவர்களின் வீடுகள் அழிக்கப்படுவதால் அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்.
ரோமானியர்களுக்கும் இஸ்ரவேலின் சில குழுக்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான விரோதங்களால் ஜெருசலேமின் மக்களும் கலக்கமடைந்தனர். அவர்கள் ஓசன்னாவின் கூச்சலுடன் மேசியாவை வரவேற்றபோது, போர் மற்றும் மோதல்களின் உலகத்திலிருந்து காப்பாற்றப்பட அமைதி மற்றும் இரட்சிப்பு நிறைந்த வாழ்க்கையைப் பெற வேண்டும் என்பது அவர்களின் உள்ளான கூக்குரலாக இருந்தது. இன்று அது நம்முடைய கூக்குரலாகவும் இருக்க வேண்டும். ஓசன்னா, ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றுங்கள்.
1) மனித மனம்: மக்களின் மனமாற்றமும் தேவனின் செயல்பாடும் யோனாவுக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. நினிவே மக்களின் மனமாற்றத்திற்காக தேவனின் எச்சரிப்பின் வார்த்தைகளைக் கொண்டு வந்த யோனாவே இங்கு அந்த மக்களின் அழிவை நாடுகிறார் என்றால் அவரின் உள்ளத்திலும் சிந்தனைகளும் எவ்வளவு இருள் இருக்கிறது என்பது தெரிகிறது. தேவனின் அன்பும் இரக்கமும் அந்த ஜனத்திற்கு கிடைக்கிறது என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்று மற்ற ஜனங்களின் அழிவை எதிர் பார்க்கிற அல்லது அதற்கு ஆதரவு கொடுக்கிற மனித நேயமற்ற சிந்தை உள்ளவர்களாய் யாரெல்லாம் இன்று இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சிலுவை நாதராம் இயேசு மனமாற அழைக்கிறார். எப்படி நினிவே மக்கள் மனம் மாறினார்களோ அதே போல இருள் நிறைந்த மனமுள்ளவர்கள் இந்த லெந்து காலத்தில் மாற தேவன் அழைக்கிறார்.
(2) மோதல் குறித்த தெய்வீகக் கண்ணோட்டம்: யோனா 4 ஆம் அதிகாரத்தில் கர்த்தர் மனித வாழ்க்கையின் மதிப்பைக் குறித்து ஒரு தெய்வீகக் கண்ணோட்டத்தை வழங்குகிறார், எதிரிகளாகக் கருதப்படுபவர்களிடமும் கருணை காட்டுகிறார்.
இயேசுவின் அமைதிச் செய்தி: இயேசுவின் போதனைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன, இது இஸ்ரவேல்-பாலஸ்தீன மோதலுக்கு பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத்தேயு 5:44).
யோனா 4:2 இல் கர்த்தர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிற தேவன் என்பதை அவர் அறிந்திருந்தார்.
யோனாவின் குறுகிய கண்ணோட்டம் இருந்தபோதிலும், அனைத்து மக்கள் மீதும், அவரது எதிரிகள் மீதும் தேவன் கொண்ட அன்பு வலியுறுத்தப்படுகிறது.
யோனாவின் கோபத்தை கர்த்தர் கேள்வி கேட்கிறார், அவரது உணர்ச்சிகளைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறார்.
பின்னர் யோனாவுக்கு நிழலைக் கொடுக்க கர்த்தர் ஒரு செடியை வழங்குகிறார், இது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இருப்பினும், பின்னர் செடியை அழிக்க கர்த்தர் ஒரு புழுவை அனுப்புகிறார், யோனா வருத்தப்படுகிறார்.
கர்த்தர் செடியின் வாடலைப் பயன்படுத்தி யோனாவுக்கு ஒரு பாடம் கற்பிக்கிறார். யோனா தான் உழைக்காத ஒரு செடியின் மீது அக்கறை கொண்டிருந்தார் என்றும், அது ஒரு இரவில் முளைத்து ஒரு இரவில் அழிந்தது என்றும் கடவுள் சுட்டிக்காட்டுகிறார்.
பின்னர் கர்த்தர் நினிவே என்ற பெரிய நகரத்தின் மீது அக்கறை கொள்ள அதிக காரணம் உள்ளது என்று விளக்குகிறார், அதில் பல மக்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. “தேவன் அன்பாகவே இருக்கிறார்”(1 யோவான் 4: 8).
(3) மாற்றத்திற்கான சாத்தியம்: சவுலால் துன்புறுத்தப்படவிற்கும் மக்களை காக்க இயேசு சவுலை சந்தித்தார். துன்புறுத்த வந்த சவுலையும் மனமாற்றத்திற்கு நேராய் வழிநடத்தினார். இன்றைக்கும் எங்கெல்லாம் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்களோ அங்கே இயேசு கிறிஸ்து அவருடன் இருக்கிறார் என்பதையும், துன்பம் இழைக்க வந்த அனைத்து சவுல்களையும் மனமாற இயேசு கிறிஸ்து அழைக்கிறார் என்பதையும் வேதம் நமக்கு எடுத்துரைக்கிறது. யோனா 3:10 இல் முழு நகரங்களும் கூட தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை யோனாவின் கதை காட்டுகிறது. இது நீண்டகால மோதல்களைக் கூட தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
(4) மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கம்: யோனா 4:11 இல் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான சாத்தியக்கூறு - நினிவேயை மன்னித்து மீட்டெடுக்க கர்த்தர் விருப்பம் - இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சூழலில் ஒரு முக்கியமான யோசனையாகும். நல்லிணக்க செயல்முறை கடினமானது மற்றும் உணரப்பட முடியாதது என்றாலும், முன்னால் எதிரிகளுடைய அமைதியையும், நல்லிணக்கத்தையும் கர்த்தர் விரும்புகிறார் என்ற கருத்து, இரு தரப்பினரும் கருணை, புரிதல் மற்றும் இரக்கத்தை முழுமையாக நீட்டித்தால் விஷயங்கள் எவ்வாறு உருவாகலாம் என்பதற்கான ஒரு பார்வையை வழங்க முடியும்.
முடிவு:
எப்பொழுது அமைதி திரும்பும்: முழுமையான அமைதி கிறிஸ்துவின் ஆட்சியில் தான் உண்டாகும். இயேசு கிறிஸ்துவின் அரசாட்சி இந்த பூமியில் நடக்கிற பொழுது இரட்சிப்பின் இறுதி ஆசீர்வாதத்தின் நேரத்தைக் கொண்டுவருவார். மேசியாவின் ஆட்சி உடல் ரீதியான பலத்தால் நிறுவப்படாது, இராணுவத் தற்காப்புகளால் பராமரிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவர் அமைதியை முழு உலகத்திற்கும் விரிவுபடுத்துவார், தேசங்கள் அவருடைய ஆன்மீக ஆட்சியைப் பெறவும், அவர்களின் வேறுபாடுகளை ஒன்றிணைக்கவும், தங்கள் ஆயுதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே குடும்பமாக வாழவும் கற்றுக்கொடுப்பார்.
நாம் என்ன செய்ய
வேண்டும்: அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
“நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு,
ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும்” (1 தீமோத்தேயு
2:2).
ராஜாக்களின் இருதயங்கள் திருப்புகிறவர் கர்த்தர்: