உதவியற்றவர்களிடம்
இயேசு கிறிஸ்துவின் இரக்கம்:
1)காத்திருப்பு(யோவான்
5:1-10)
வியாதியாய் இருக்கிற மனிதர்கள்
பெதஸ்தா என்கிற குளத்திலே அநேக நாட்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அதே வேளையில் நாம் கிறிஸ்துவுக்குள்
காத்திருக்கும் பொழுது அது மகிழ்ச்சியான அனுபவம்.
2) உதவி செய்ய
யாரும் இல்லை:
அங்கே அந்த குளத்திலே அவரைக் கொண்டுப்போய்
விடுவதற்கு, உதவி செய்வதற்கு யாரும் இல்லாத நிலையில் இருந்து கொண்டிருந்தார்.
இயேசுவால் மட்டும்
எப்படி உதவி செய்ய முடியும்?
"ஆதலால்,
அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய
வல்லவராயிருக்கிறார்" (எபிரேயர் 2:18).
வியாதிப்பட்ட ஒரு வயோதிபத் தாயார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சீக்கிரத்தில் குணமாகவேண்டுமென்று பலர்
ஜெபித்தார்கள். ஆனால், அவரோ தன்னைப் பார்க்க வந்தவர்களிடம், தான் யாருக்கும் கஷ்டம்
கொடுக்காமல் மரித்திடவேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என்று சொன்னார். பின்னர்
இரண்டு நாள் கழித்து அத்தாயார் அவர் விரும்பியபடியே மரித்துப்போனார்கள்.
“முப்பத்தெட்டு வருஷங்களாக” வியாதிகொண்டிருந்த ஒரு மனிதனைச் சந்தித்த இயேசு, “சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா” என்று கேட்கிறார். முப்பத்தெட்டு வருஷங்களாக இந்த வியாதியோடேயே வாழ்ந்து அதற்கு அவன் பழக்கப்பட்டிருந்திருக்கலாம். இப்படியே எஞ்சிய காலங்களையும் கடத்திவிடலாம் என்று நினைத்து அவன் வாழ்ந்துகொண்டிருக்கலாம். படுத்திருந்தவனிடம், “சுகமாக விரும்புகிறாயா என்று கேட்டபோது, அவன் அதற்குப் பதிலளிக்காமல் தன்னைக் குளத்தில் கொண்டுபோய்விட யாரும் இல்லை” என்கிறான். இயேசுவோ, “படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றுக் கூறி அவனை விடுதலையாக்கிவிட்டார்.
எப்படி வாழுகிறோம் என்ற உணர்வின்றி,
பழகிப்போன ஒரு வாழ்வை நாமும் வாழ்ந்துகொண்டிருக்கலாம். அதைவிட்டு வெளியில் வர விரும்பாதவர்களாக,
அதற்குள்ளேயே தொடர்ந்து வாழ விரும்பலாம். இன்று ஆண்டவர் நம்மிடமும் கேட்கிறார். நமது
நிலையை நாம் உணரவேண்டும். சொஸ்தமாகுதல், அதாவது ஒரு விடுதலை நமக்கு வேண்டுமென்று நாம்
உணர்ந்திட வேண்டும். நாம் உணர்வற்றவர்களாய் இருக்கும்போது தேவன் நம்மை விடுதலையாக்கமுடியாது.
நாம் உணர்ந்து திருந்த எண்ணும்போதுதான் தேவனும் நம்மை விடுதலையாக்குவார். நமது வாழ்வின்
எப்பகுதியில் இன்னமும் விடுதலை தேவை என்பதை நாமே ஆராய்ந்து பார்த்து, அதிலிருந்து விடுவிக்கப்படவேண்டுமென்று
வாஞ்சையுடன் இயேசுவை நாடுவோமாக.
3) இயேசு கிறிஸ்துவின்
இரக்கம்:
இயேசு கிறிஸ்துவுக்கு
அந்த மனிதனின் மேல் இரக்கம் வர காரணம் என்ன?
“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதிமொழிகள் 28:13). அந்த மனிதன் தன்னுடைய பாவத்தை அறிக்கை செய்திருக்க வேண்டும். அதனால்தான் இயேசு கிறிஸ்து அந்த மனிதனைப் பார்த்து “இனிப் பாவம் செய்யாதே” என்று கூறுகிறார்(யோவான் 5:14). வியாதிப்பட்ட மனிதனின் வேதனையை அறிந்த இயேசு கிறிஸ்து அவரைத் தேடி வருகிறார். எதற்கு? அவனை வியாதியில் இருந்து விடுவித்து அந்த மனிதருக்கு உதவி செய்வதற்கு, அதே இயேசு கிறிஸ்து இன்றைக்கு உங்கள் மத்தியிலும் இருக்கிறார். உங்கள் மனதின் எண்ணங்களை அறிந்து உங்களுக்கு உதவி செய்ய வல்லவராக இருக்கிறார்.
இயேசு கிறிஸ்து அவன் மேல் இரக்கம்
கொண்டு எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார், அந்நேரமே அவன் சுகமானான்.
அந்த மனிதன் 38 வருடங்களாக எவ்வளவு காலம் பாடனுபவித்தான், இரட்சகர் இடைப்பட்டவுடன்
எவ்வளவு சீக்கிரத்தில் சுகம் வந்தது என தயவுசெய்து ஒப்பிட்டுப் பாருங்கள். “சுகம்
4)ஒரு புதிய
ஆரம்பம்:
அந்த சுகப்படுத்துதல் கதையின் முடிவல்ல,
மாறாக அந்த மனிதனுக்கு ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாகும். பின்னர் இயேசு அவனை ஆலயத்தில்
கண்டுபிடித்து, "இனிமேல் பாவம் செய்யாதே" என்று கூறுகிறார், இது ஒரு
புதிய இரட்சிப்புக்கான வாழ்க்கைக்கு அழைப்பு. இந்த சுகப்படுத்துதல் பரிசுத்தத்திற்கும்,
மாற்றப்பட்ட வாழ்க்கைக்கும் அழைப்பு என்பதை இது குறிக்கிறது.