Sermons

இயேசுவினிடத்தில் சிறு பிள்ளைகள்

ஒரு தோட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு விதையின் வலிமையில் ஆரம்பிக்கிறது. மனுகுலத்தின் மீதான எதிர்பார்ப்பு குழந்தைகள் மீதான நம்பிக்கையில் ஆரம்பிக்கிறது.

 இயேசுவினிடத்தில் சிறு பிள்ளைகள்:

“இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.” (மத்தேயு 19:14) அப்படியென்றால், சிறு பிள்ளைகளை இயேசுவினிடத்தில் வர விடுவதிலும் இயேசுவோடு வளர விடுவதிலும் குழந்தைகளின் எதிர்காலத்தின் வளர்ச்சி இருக்கிறது.

வளர வழி செய்ய வேண்டும்:

மோசே பிறந்த சூழல் வளர்வதற்கு வழி இல்லை. ஆனால் பார்வோன் குமாரத்திக்கு பிள்ளையின் மீது இரக்கம் உண்டாயிற்று (யாத்திராகமம் 2:6). இங்கே ஒரு கூட்டு முயற்சியால் மோசே வளர்வதற்கு வழி உண்டாயிருந்தது. இந்த முயற்சியில் மோசேயின் தாய், உதவியாளர், பார்வோனின் மகள் இருக்கிறார்கள். இன்று கிறிஸ்துவில் பிள்ளைகள் வளர்வதற்கு வழி செய்ய வேண்டும். கிறிஸ்துவில் வளர முடியாத சூழல் போராட்டம் இருக்கலாம் ஆனால், கர்த்தருடைய கிருபையினால் நாம் கிறிஸ்தவ வழியில் நடத்த முடியும். எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது ஜெபமும், வசனமும் அதனோடு கூடிய போதனையும், நம்முடைய முன்மாதிரியுந்தான்.

குழந்தைகளுக்கு போதனை தேவை:

குழந்தைகள் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என புலம்பாதீர்கள். அவர்கள் எப்போதும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள் - ராபர்ட் புல்கம். சிலர் ஆலயத்தில் பாடும் பாடல் பிரசங்கங்கள், வேதவாசிப்பு இது குழந்தைகளுக்கு பயனடைவதில்லை என்றும் நம்புகிறார்கள். மரியாளின் வாழ்த்து செய்தி எலிசபெத்தின் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று (லூக்கா 1:42-44). பரிசுத்த ஆவியானவரால் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையிடம் ஊடுற முடியும் என்றால், இன்று நம் கரத்தில் இருக்கும் பிள்ளைகளை அவரால் எவ்வளவு போதிக்க முடியும் என்று சிந்திப்போம்.

 எப்படிப்பட்ட போதனை தேவை?

  • கிறிஸ்துவின் மதிப்பைக் கூறுகிற போதனை தேவை (சங்கீதம் 139:15).
  • கர்த்தருக்கு பயப்படுகிற பயம்.
  • பெற்றோரை கனப்படுத்த வேண்டும் (எபேசியர் 6:1)

 எதை போதிக்கிறோம்?

  • கிறிஸ்துவையும் அவர் மகத்துவங்களையும், கட்டளைகளையும் போதிக்கிறோமா? (உபாகமம் 6:6,7)
  • இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தில் சிறுவர்களை பயன்படுத்தினார் என்று போதிக்க வேண்டும். (5 அப்பம் 2 மீன்)
  • இன்று நமது பிள்ளைகளையும் பயன்படுத்த முடியும் என்று அவர்களுக்கு உற்சாகப்படுத்த வேண்டும்.

 உருவாக்குவது:

இப்படி போதனைகள் மூலம் அவர்களை ஒவ்வொரு நாளும் நாம் உருவாக்க வேண்டும். அநேக சாமுவேலை உருவாக்க கர்த்தர் ஆயத்தமாய் இருக்கிறார். ஆனால், எத்தனை ஏலீகள் உள்ளனர்? இன்று நமக்கு முன்பாக இருக்கும் கேள்வி இது. கர்த்தர் இந்த அனேக ஏலீகளைத் தேடுகிறார். ஏனென்றால், குழந்தைகளை கிறிஸ்துவுக்காக உருவாக்குவதற்கு தேடுகின்றார். ஆன்லைனில் ஒரு குடும்பம் குடும்ப ஜெபம் பண்ணுகிறது. அதேபோல் நாம் இன்று வாய்ப்புகளை உருவாக்கி பிள்ளைகளை உருவாக்க அழைக்கப்படுகிறோம். பிள்ளைகளிடம் நாம் பேச அழைக்கப்படுகிறோம் அவர்களும் இன்று தரிசனம் காண்கிறார்கள், நாம் அவர்களோடு கூட பேசும்பொழுது அதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

சபை /பெற்றோர் கடமை:

  • பெற்றோர்கள் ஞானஸ்தான உடன்படிக்கையை நினைவுக் கூர்ந்து கர்த்தருக்கு பயப்படும் பயத்தோடு பிள்ளைகளுக்கு கர்த்தரைப் போதிக்க அழைக்கப்படுகிறோம்.
  • பெற்றோர் மற்றும் சபை பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
  • நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  • நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை (மத்தேயு 13:3-8) விதை – வசனம், நல்ல நிலம் - குழந்தைகள் (மாற்கு 10:14), விதைப்பது - சபை, பெற்றோர்.
  • சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடம் கொடுங்கள் என்று கூறுகிறார்.
  • நல்ல நிலத்தில் நல்ல விதைகளை விதைக்கும் பொழுது அது 30,60,100 ஆக பலன் கொடுக்கிறது.
  • மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் (கலாத்தியர் 6:7).

Loading...