“ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” ( சங்கீதம் 50:15). பெரும்பாலும், ஆபத்து வரும்போது, முதலில் நாம் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் விரைகிறோம். முதலில் நமது பிரச்சனையையோ அல்லது மகிழ்ச்சியையோ கர்த்தரிடம் தெரிவிக்க வேண்டும், பின்னர் மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த வார்த்தை என்பது உறுதியான வார்த்தை. அதாவது, கர்த்தர் சொல்லுகிறது நான் விரும்பினால் உன்னை விடுவிப்பேன் என்று அவர் கூறவில்லை, மாறாக ஒரு தெளிவான வாக்குறுதி "என்னை நோக்கிக் கூப்பிடுங்கள் நான் உங்களை விடுவிப்பேன்." இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புவது ஜெபப் பழக்கம்: ஒவ்வொரு பிரச்சனையிலும், சந்தோஷத்திலும், எதிர்பார்ப்பிலும் - முதலில் கர்த்தரை தேடுங்கள்.
"என்னை நோக்கிக் கூப்பிடுங்கள்" இது அனைவருக்குமுள்ள ஒரு கடமை:
1. இந்தக் கடமை நமது இயல்புக்கு ஏற்புடையது. துன்பத்தில் நாம் அனுதாபத்தையும் உதவியையும் நாடுகிறோம். குழந்தை இயல்பாகவே தன் தாயிடம் அழுவது போல, நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிட வேண்டும்.
2. இந்தக் கடமை நமது சூழ்நிலைகளால் தூண்டப்படுகிறது. "பிரச்சனை" வலியை மட்டுமல்ல, பயத்தையும் ஏற்படுத்துகிறது. தேவையின் அழுத்தத்தின் கீழ் நாம் இரக்கம் மற்றும் கிருபைக்காக கிருபையின் சிம்மாசனத்திற்கு வருகிறோம்.
3. இந்தக் கடமை நல்லவர்களின் முன்மாதிரியால் செயல்படுத்தப்படுகிறது. அவர்கள் தாங்கள் அறிந்ததைப் பற்றிப் பேசுகிறார்கள். நன்றியுள்ள இதயங்களுடன் கர்த்தர் தங்களுக்குச் செய்ததைப் பற்றிச் சொல்லுகிறார்கள் (சங்கீதம் 77:1, 2 கொரிந்தியர் 1:3, 4).
“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்”(எரேமியா 33:3). இங்கே எரேமியா தீர்க்கதரிசி ஜெபிக்கிறார். ஜெபிக்கிறவரை பார்த்து ஆண்டவர் என்னை நோக்கி ஜெபம் பண்ணு அதாவது, கூப்பிடு என்று கூறுகிறார். அப்படியென்றால், ஏதோ ஒரு விதத்தில் ஒரு குறைவு, ஒரு வெறுமை, ஒரு தோல்வியின் விரக்தி இப்படிப்பட்ட சூழல்களில் நீங்கள் இருந்திருக்கலாம். அதினால் தான் ஆண்டவர் சோர்ந்து போகாமல் என்னை நோக்கி கூப்பிடுங்கள் என்று கூறுகின்றார். கர்த்தர் எப்போதும் நமக்குப் பதிலளிப்பார் என்பது மற்றொரு உறுதி. அவர் தேடுபவர்களுக்குப் பல வழிகளில் பதிலளிக்கிறார். அவர் அவர்களைக் காப்பாற்றுகிறார், மீட்கிறார், விடுவிக்கிறார், ஆறுதல்படுத்துகிறார், என்பது மனிதர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாகும்.
மனித வாழ்வில் ஏற்படும் மிகவும் பொதுவான பிரச்சனைகள் சிலவற்றை சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார் (சங்கீதம் 107), மேலும் அவர்களின் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக கர்த்தர் எவ்வாறு உதவுகிறார் என்பதைக் காட்டுகிறார்.
நாடுகடத்தலும் சிதறடிப்பும் (சங்கீதம் 107:2-9). இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமையாக இருந்தது.
சிறைபிடிப்பு மற்றும் சிறைவாசம் (சங்கீதம் 107:10-16). பவுலும் சீலாவும் சிறையிலிருந்து தப்பித்தது, அப்போஸ்தலர் 16:25-28 வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் சிறையிலிருந்து வெளியேறி, சிறைக்காவலனின் வீட்டிற்குச் சென்று அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நற்செய்தியைக் கூறினர்.
உடல் நோய் மற்றும் சோர்வு (சங்கீதம் 107:17-22). புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து எத்தனையோ அற்புதங்களையும் அநேக பேரை சுகப்படுத்தி இருக்கிறதை பார்க்க முடியும்.
கடலில் வரும் ஆபத்து மற்றும் துன்பங்களைக் குறித்து சொல்லப்படுகிறது. (சங்கீதம் 107: 23-32). மாற்கு 4:35 - 41 வரை இயேசுவின் சீஷர்களும் படகில் சென்ற பொழுது சீஷர்கள் இயேசுவை நோக்கி சத்தமிட்டு கூப்பிட்டார்கள் அப்பொழுது அவர் காற்றை நிறுத்தினார்.
பிரச்சனைகள் வேறு வேறு, ஆனாலும் எல்லோரும் ஒரே மாதிரியாக, கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள். கர்த்தர் அவர்கள் சத்தத்தை கேட்டு அவர்களை விடுவித்தார்.
ஏன் கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது அவர் நம்மை விடுவிக்கிறார்?
சங்கீதம் 91:14-15-ல், "அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்" என்று கூறுகிறார். தம்மைத் தேடுபவர்களுக்கும், தம்மீது அன்பு வைத்திருப்பவர்களுக்கும் பதிலளிப்பதாக அவர் வாக்குறுதி அளிப்பதால், நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் நம்மை விடுவிப்பார் என்று பைபிள் விளக்குகிறது. இந்த விடுதலை அன்பின் செயலாகும்,
கர்த்தரை எப்படி கூப்பிட வேண்டும்?
அவரது நாமத்தை சொல்லி கூப்பிட வேண்டும். எபினேசரை - உதவி செய்யும் கர்த்தரை - அழைக்கவும். (1சாமுவேல் 7:12) "அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்." மேலும் அவரது நாமத்தை ஏற்றுக்கொண்டு கூப்பிடுபவர்களுக்கு அவர் உண்மையுள்ளவராக இருப்பதன் விளைவாகும், மேலும் அவரை நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும் இது கிடைக்கிறது.
ஏலோஹிம் (தேவன்): வல்லமையுள்ள கர்த்தர், அனைத்து படைப்புகளின் மூலமும் விளங்குகிறது.
எல்ஷடாய்: சர்வவல்லமையுள்ளவர், தாராளமானவர், எல்லாம் போதுமானவர் (ஆதியாகமம் 17:1).
யெகோவா ராஃப்பா: குணப்படுத்தும்
ஆண்டவரே, உங்கள் ஆரோக்கியத்திற்காகக் கர்த்தர் (யாத்திராகமம் 15:26).
யேகோவா நிசி: தேவன் என்
ஜெயக்கொடி.(யாத்திராகமம் 17:15-16).
யேகோவாயீரே: கர்த்தர் பார்த்துக்கொள்ளுவார்.(The Lord Will Provide) (ஆதியாகமம் 22:14).
யெகோவா ஷாலோம்: கர்த்தர் சமாதானமுள்ளவர்.
கர்த்தர் நம் கஷ்டங்களிலிருந்து நம்மை விடுவிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார்:
2 கொரிந்தியர் 1:20 கூறுகிறது: "தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே". இதன் பொருள், தேவனுடைய வாக்குறுதிகள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகின்றன, மேலும் அவருடைய உறுதிப்பாட்டின் மூலம் அவை உறுதிப்படுத்தப்படுகின்றன.
ஆம் (Yes): இது தேவனுடைய வாக்குறுதிகள் அனைத்தும் உண்மையானவைகள் மற்றும் நிறைவேறும் என்பதைக் குறிக்கிறது.
ஆமென் (Amen): இது தேவனுடைய வாக்குறுதிகளை உறுதிப்படுத்துகிறது மற்றும் விசுவாசத்தின் மூலம் அவற்றை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.
பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை:
"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." (யோவான் 16 : 33) என்று கூறுகிறது. உபத்திரவங்கள் என்பது துன்பங்கள் அல்லது சோதனைகளையும் குறிக்கிறது. அனைவருக்கும் பிரச்சினைகள் மற்றும் கஷ்டங்கள் உள்ளன. கர்த்தர் நம்மை விடுவிப்பதற்கு முன்பு நாம் பெரும்பாலும் சிரமங்களைத் தாங்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால் அவர் அவற்றைப் பயன்படுத்தி நம்மைத் தம்முடைய குமாரனின் சாயலுக்கு ஒப்பாக்குகிறார் (ரோமர் 8:29) மற்றும் நம்மைப் பரிபூரணப்படுத்துகிறார்.
நீங்கள் ஜெபத்தில் மனத்தாழ்மையுடன் கூப்பிடுகிறீர்களா?
உதவி கேட்க முடியாத அளவுக்குப் பெருமையாக இருப்பதால், பலர் தங்கள் கஷ்டங்களில் சிக்கித் தவிக்கிறார்கள், மேலும் தாங்களாகவே அதைச் சமாளிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் மனந்திரும்பி, தாழ்மையுடன் ஜெபித்து, அவரிடம் உதவி கேட்கும் வரை கர்த்தர் அவர்களை அவர்களின் கஷ்டங்களில் இருக்க அனுமதிப்பார். சங்கீதம் 50:15 கூறுகிறது, “ஆபத்து நாளில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.” நிபந்தனை என்னவென்றால், கடவுளை நோக்கிக் கூப்பிடுவது. இதன் விளைவு கடவுளை மகிமைப்படுத்துவதாகும். முதலில், நாம் மனத்தாழ்மையுடன் இருந்து, அவருடைய உதவியும் விடுதலையும் நமக்குத் தேவை என்பதை உணர வேண்டும். உதவி கேட்பது மனத்தாழ்மையாகும்.
கிறிஸ்துவின் கிருபையால் விடுவிக்கப்படுகிறோம்: மாற்கு 4:39 வது வசனம் இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும் இங்கே நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அதேபோல இங்கே பயங்கரமான புயல் காற்றினால் இவர்கள் அவதிப்படுகிறப்பொழுது ஆண்டவருடைய கிருபை அங்கே உண்டாகிறது. நம்முடைய வாழ்க்கையில் சில நேரங்களில் சில காரியங்கள் வனாந்தரம் போல் புயலைப் போல தெரியலாம் ஆனால், அதன் கூடவே அவருடைய கிருபையும் நம்மோடு கூட தொடர்ந்து வருகிறதே என்பதை நாம் பார்க்கும்பொழுது, நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படி என்றால் என்ன இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்திலே நடந்து வந்தார்கள் அந்த வனாந்தர பாதையிலே அவர் பகலிலே மேகஸ்தம்பமாகவும் இரவிலே அக்னி ஸ்தம்பமாகவும் வெளிப்பட்டார். அதுதான் கிருபை. அந்த வனாந்தரத்தில் நடக்க வேண்டிய அந்த சூழ்நிலையில் கிருபையாக ஆண்டவர் செய்த செயல் அது.
யோசேப்பு, சகோதரர்களால் கொண்டுப் போகிறபொழுது அங்கே ஒரு குழி ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். அது அவருடைய கிருபை இல்லையென்றால், அவர்கள் அவனை கொன்று போட்டிருப்பார்கள். .அதேபோல், அவருடைய வஸ்திரம் உருவப்பட்டது ஆனால், பிற்பாடு அவருடைய கிருபையினாலே ஒரு மேன்மையான ஒரு ராஜாவுக்குரிய வஸ்திரம் அவனுக்கு கொடுக்கப்பட்டது. யோவான் 16:32-33 இயேசுவினுடைய ஒரு சோதனையான நேரத்தில் இயேசு கிறிஸ்து கூறுகிறார், நான் தனியாக இல்லை பிதா என்னோடு கூட இருக்கிறார். அதேபோல, தான் இன்று நம்மோடு கூட ஆண்டவர் எல்லா சூழ்நிலையிலும் இருக்கிறார். இதை உணர்ந்து நாம் சமாதானத்தோடு இருக்க அழைக்கப்படுகிறோம்.
சில நேரங்களில் எவ்வளவுப் பெரிய தேவ மனிதர்களாக இருந்தாலும் விசுவாசத்திலே குறைந்து விடுகிறோம். ஏன் பவுல் கூட 2 கொரிந்தியர் 1:9,10 வசனங்களை பார்க்கும் பொழுது நாங்கள் மரித்து விடுவோம் என்று எங்களுக்கு நிச்சயம் இருந்தோம் ஆனாலும் தேவன் எங்களை தப்புவித்தார் என்று கூறுகிறதை பார்க்க முடிகிறது. மேலும் இப்படிப்பட்ட விசுவாச குறைவு உள்ள நேரங்களிலே, நம்முடைய குறைவுகளில் மத்தியிலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம்மோடு கூட இருந்து நம்மை இப்படிப்பட்ட எல்லா தீமைக்கும் விலக்கி பாதுகாத்துக் கொள்கிறார். அதினால் தான் அவர் கிருபை என்றும் உள்ளது என்று வசனம் சொல்லுகிறது.
கதை:
மதுரையை சேர்ந்த ஒரு பெண், அவருடைய சிறு வயதில் பள்ளியிலே வேதம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது அவர்கள் வாங்க மறுத்து விட்டார்கள். ஆசிரியர் கேட்ட பொழுது,நாங்கள் இதை படிக்க மாட்டோம் நாங்கள் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்று கூறிவிட்டாள். ஆசிரியர் சொன்னார் உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் வரும் பொழுது, கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள் அப்பொழுது அவர் சத்தத்தை கேட்பார் என்று கூறிவிட்டு முடித்துவிட்டார். சிறுபிள்ளை வளர்ந்து பெரியவளாகி திருமணமாகி அவர்களுக்கு ஒரு குழந்தை இருந்தது அந்த குழந்தை நீச்சல் பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்தாள். அப்பொழுது பயிற்சியாளர் சற்று நேரம் கவனிக்காமல் இருந்துவிட்டார், அந்த நேரத்தில் அந்த பெண் தண்ணிற்குள் மூழ்குவதாக சூழல் வந்தது இவர்கள் தூரத்தில் இருந்து பார்த்து சத்தமிட்டு அழுதார்கள். அப்பொழுது சிறுவயதில் ஆசிரியர் சொன்ன அந்த வார்த்தை திடீரென நினைவுக்கு வந்து உடனே இயேசுவை நோக்கி கூப்பிட்டாள் அந்த சிறு பெண் குழந்தை வெளியே வந்து அம்மா யாரோ வந்து என்னை தூக்கி விட்டாங்கம்மா நான் வெளியே வந்துட்டேன் என்று கூறினாள். இவர்கள் யோசித்துப் பார்த்தார்கள் நான் கூப்பிட்டது இயேசு கிறிஸ்துவை தான் இயேசு கிறிஸ்து தான் இந்த உதவியை செய்தார் என்பதை அறிந்து விசுவாசித்து, இன்று இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிற ஒரு பெண்ணாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.