கர்த்தரின் மாறா நீதி யோபு 8:1-10 (5,6)
கர்த்தரின் மாறா நீதி என்பது, தேவன் என்றும் நீதியையும் நியாயத்தையும் நேசித்து, நீதிமான்களைக் காத்து, தம்முடைய வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகச் செயல்படுவதைக் குறிக்கிறது. தேவன் பூமிக்குரிய நீதியை நிலைநிறுத்துகிறார். நம்மை விசுவாசத்தினால் நீதிமான்களாக்குகிறார். கர்த்தரின் நீதி அவருடைய மாறாத கிருபையுடனும் அன்பினாலுமே வெளிப்படுகிறது. மேலும் தேவனுடைய நீதி என்பது அவருடைய குணத்திலும், ஞானத்திலும் இருந்து செயல்படுவது.
“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” (2 கொரிந்தியர் 5:21).
துன்பப்படும் ஒரு நீதிமான்: யோபு குற்றமற்றவர், நேர்மையானவர், கர்த்தருக்கு பயப்படுகிற பயமுள்ளவர் மற்றும் வசதியானவர். ஆனால், அவர் திடீரென்று தொடர்ச்சியான பேரழிவுகள் மூலம் தனது குழந்தைகள், செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை இழக்கிறார். பரலோகக் காட்சியில், யோபு கர்த்தரை உண்மையாக நேசிக்கிறாரா அல்லது ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே நேசிக்கிறாரா என்று சாத்தானால் குற்றம் சாட்ட படுகிறார். மேலும் யோபுவின் சோதனைகள் பாவத்தால் அல்ல, அவரது விசுவாசத்தின் நம்பகத்தன்மையை சோதிக்க அனுமதிக்கப்படுகின்றன.
யோபுவின் நண்பரின் பார்வைகள்: கர்த்தர் நீதியுள்ளவர் என்று பில்தாத் சரியாகக் கூறினாலும், யோபுவின் குறிப்பிட்ட துன்பத்திற்கு தவறாகப் பயன்படுத்துகிறார். பிள்ளைகளின் பாவத்தினால் இது உண்டாகி இருக்கலாம் என்றும் பரிசுத்தமும் செம்மையாய் இருந்தால், அவர் கர்த்தரிடம் தன்னை அர்ப்பணித்து, அவருடைய கிருபையையும் கருணையையும் வேண்டி, ஒரு தெய்வீக வாழ்க்கையை வாழ்ந்தால், அது இன்னும் அவருக்கு நன்றாக இருக்கும், மேலும் அவர் தனது முந்தைய அல்லது சிறந்த சூழ்நிலைகளுக்குத் திரும்புவார் என்று பில்தாத் கூறுகிறார். உண்மை என்னவெனில், ஓட்டுநரால் காரை மோதிய ஒருவரிடம் "அவர்கள் ஒரு சிறந்த ஓட்டுநராக இருந்திருந்தால், விபத்து நடந்திருக்காது" என்று சொல்வது போன்றது. இது தர்க்கரீதியாக நேர்த்தியானது, ஆனால், அடிப்படையில் தவறானது. “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது" (மத்தேயு 5:10) என்பது இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் கூறப்பட்ட ஒரு முக்கிய ஆசீர்வாதம். சத்தியத்திற்காகவோ, நேர்மைக்காகவோ அல்லது இயேசுவிற்காகவோ அவமானங்கள், நிந்தனைகள் மற்றும் துன்பங்களைச் சகிப்பவர்கள், பரலோகத்தில் பெரிய பலனைப் பெறுவார்கள். யோபு நீதிமான் (யோபு 1:1). அவரது துன்பம் தண்டனை அல்ல.கர்த்தரின் நீதி மனித தர்க்கத்தை விட ஆழமானது. எல்லா துன்பங்களும் தனிப்பட்ட பாவத்தால் ஏற்படுவதில்லை. இது சோதனைகளின் போது கர்த்தரிடம் உண்மையான தொடர்பு கொள்வதன் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.யோபுவுக்கும் இது போல் நடந்தது.
கர்த்தரின் நீதி: யோபு மனத்தாழ்மையுடன் கீழ்ப்படிகிறார், அவர் தனது புரிதலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், கர்த்தரை சந்திப்பது எல்லா பதில்களையும் பெறுவதை விட சிறந்தது என்றும் ஒப்புக்கொள்கிறார். கர்த்தர் யோபுவை உறுதிப்படுத்துவது, நண்பர்களின் கடுமையான பழிவாங்கும் இறையியலைக் கண்டிப்பது மற்றும் யோபுவை மீட்டெடுப்பது எல்லாம், கர்த்தர் நீதியுள்ளவர் என்பதைக் குறிக்கிறது. கர்த்தரின் நீதி எப்போதும் உடனடியாக இருக்காது நாம் உடனடி விளைவுகளையோ, வெகுமதிகளையோ பார்க்க முடியாது.
துன்பம் எப்போதும் தண்டனை அல்ல. தெய்வீக நீதி மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட அளவில் செயல்படுகிறது. மனித ஞானம் வரம்புக்குட்பட்டது.
நாம் அறிந்து கொள்ள வேண்டியது:
முடிவு: இயேசு கிறிஸ்து சிலுவையிலே சாத்தானை வெற்றி சிறந்தார். அதேபோல இங்கு யோபுவுடைய விஷயத்திலும் சாத்தானின் சவாலை ஜெயிப்பதற்காக கர்த்தர் யோபுவைப் பயன்படுத்துகிறதையும் பார்க்க முடிகிறது, வெற்றியும் பெறுகிறார். ரோமர் 3:25-26-ல் வசனங்கள், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் விசுவாசத்தினால் மீட்பு, பாவம் மன்னிப்பு மற்றும் தேவனுடைய நீதியை வெளிப்படுத்துவதை விளக்குகின்றன. முற்காலத்தில் பொறுமையாய் இருந்த தேவன், இக்காலத்தில் இயேசுவை பாவம் தீர்க்கும் பலியாகக் கொடுத்து, தாம் நீதியுள்ளவராகவும், விசுவாசிப்பவரை நீதிமானாக்குபவராகவும் விளங்குகிறார்.
பிதாவின் நீதி என்பது துன்பத்தின் வழியாக பாடுகளின் மத்தியிலும் தேவ ராஜ்ஜியத்தை கட்டி எழுப்புவதற்கு ஒன்றாக இருக்கிறது. நாம் இதைப் புரிந்து எல்லா சூழ்நிலையிலும் வெற்றிப் பெற்று தேவன் நாமத்தை மகிமைப்படுத்துவோம்.
கர்த்தரின் மாறாத நீதி, மனிதர்கள் தங்களின் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளிலும் அவரை நம்பி, அவரை அடைக்கலமாகக் கொண்டு வாழ வழிவகுக்கிறது. இன்று நமக்கான நற்செய்தி கடினமான சூழ்நிலைகளிலும் இந்த யோபுவைப் போல விசுவாசத்தை விட்டு விலகாமல் கர்த்தர் இடத்தில் உறுதியாக இருப்போமானால், மாறாத நீதி உள்ள ஆண்டவர் யோபுவை அன்று ஆசீர்வதித்தது போல இன்றும் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவர் உயர்த்த வல்லவராக இருக்கிறார்.