"ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத்தொகையில்லை.”
இந்த வசனத்தை நாம் புரிந்துக் கொள்வதற்கு அடுத்த வசனத்தையும் பார்த்தால் தான் அதை புரிந்துக் கொள்ள முடியும். தன்னுடைய மணவாட்டியாகி சபை எவ்வளவு சிறப்பானது என்பதை காட்டுவதற்கு மணவாளனாகிய இயேசு கிறிஸ்து, இந்த வசனத்திலே இந்த மூன்று பேரோடு ஒப்பிடுகிறதை பார்க்கலாம். இந்த மூன்று வகையான ஸ்திகள் யார் என்பதையும், அதன் ஆவிக்குரிய அர்த்தத்தையும் பார்ப்போம்.
ராஜஸ்திரீகள் அறுபதுபேரும் - ராஜஸ்திரிகள் என்பது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய இஸ்ரவேலர்களை குறிக்கும். ஏசாயா 54:5. "உன் சிருஷ்டிகரே உன் நாயகர” என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாயகர் என்பது மணவாளன் அல்லது புருஷர் என்று பொருள். யாருக்கு என்ற கேள்வி வரும் பொழுது? இங்கே பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய இஸ்ரவேலரை பற்றி இங்கே பேசப்படுகிறது. அப்படியானால், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை ராஜஸ்திரீகள் என்று வேதம் பேசுகிறது. மேலும் யோவான் 3:29 ,ன் படி பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மணவாளனுடைய தோழர்கள் என்ற வரிசையிலும் வருவார்கள். அறுபது என்பது மனுஷனுடைய பூரணத்தை குறிப்பிடுகிறது.
மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு - உபத்திர காலத்து பரிசுத்தவான்களாகிய மணவாட்டியின் தோழிகள் தான் மருமனையாட்டிகள். வெளி 20:4 இல் மணவாளன் மேல் உள்ள நேசத்தால் ரத்த சாட்சியாக மரித்து, ஜெயம் பெற்றவர்கள் மணவாட்டியின் தோழிகளாக கருதப்படுவார்கள். 80 என்பது கிறிஸ்துவின் பூரணம் குறிக்கிறது.
கன்னியருக்குத்தொகையில்லை - எரேமியா 18:13 இல் இஸ்ரவேல் என்னும் கன்னிகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் இரட்சிக்கப்பட்ட திரளான கூட்டத்தார் இவர்கள். ( வெளி 7:9).
இந்த மூன்று கூட்டத்தாரை பார்க்கிலும், மணவாட்டி என்பவள் மிகவும் சிறந்தவள் என்று அடுத்த வசனத்தில் மணவாளன் குறிப்பிடுகிறார்.
கிறிஸ்து மணவாட்டி சபைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்என்பதை அறியீர்களா?
குறிப்பு வசனம்: சங் 45: 14, 1இராஜா 11: 3