Sermons

உன்னதப்பாட்டு 6 : 3

சபை பேசுவது

"நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.”

கொடியானது செடியில் நிலைத்திருப்பது போல, சபை இயேசு கிறிஸ்துவின் நிலைத்திருப்பதை கூறுகிறார்கள். 

"நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்”.  இந்த வசனம் கர்த்தருடைய புதிய உடன்படிக்கையை வெளிப்படுத்துகிறது. ஏபி 8 : 10 -ல் கர்த்தருடைய பிரமாணங்கள் ஜனங்கள் இருதயத்தில் எழுதப்படும் என்றும், மேலும் நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் கூறுகிறார். மேலும் சபைக்கு இயேசு கிறிஸ்துவிடம் இருக்கும் அன்பையும், ஐக்கியத்தையும் வெளிப்படுத்தும் வார்த்தையைக் குறித்து இயேசுகிறிஸ்து கூறுகிறார், இதன் மூலமாக  "நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அறிவீர்கள்" என்கிறார் (யோவான் 14 : 20, 21). அவருடைய கற்பனைகளைப் பெற்று, அவைகளை  கைக்கொண்டு நடக்கிறவர்களே, அவரில் நிலைத்திருக்க முடியும் என்பதை யோவான் 14 : 21 -வது வசனம் நமக்கு கூறுகிறது. ஒருவன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து பூரணமாக இருக்க வேண்டும்;. அதாவது கர்த்தருடைய வசனத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். இது  அன்பின் ஊற்றிலிருந்து வரும் இரட்சிப்புக்கேற்ற  விசுவாசத்தின் முக்கிய நிலையாகும். கிறிஸ்துவின் மேல் அன்பில்லாமல் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வது முடியாதக் காரியம். இயேசுவை நேசித்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள இடைவிடாமல் பிரயாசப் படுகிறவர்களுக்கு,  கிறிஸ்து ஒரு விசேஷித்த அன்பு, கிருபை, தயவு அவருடைய ஆழமான பிரசன்னம் ஆகியவற்றை கொடுத்துள்ளார். 

"அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்"  இங்கே லீலி புஷ்பம் என்பது சபையைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து சபையோடு இடைப் படுவதைக் குறிக்கிறது. இன்று அவர்  வேத வசனங்களின் மூலம் நம்முடன் கூட இடைப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் நமக்குள் இருக்கும் ஆவியானவர் மூலம் ஐக்கியம் தொடர்கிறது.

நீங்கள் கிறிஸ்துவின் பிரமாணம் உடையவர்களாக இருக்கிறீர்களா?

குறிப்பு வசனம்:  சங் 23: 1, சங் 63: 1, எபி 8: 10

Loading...