"உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.”
சபையாகிய ஸ்தீரியை பார்த்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட ஜனங்கள் கேட்பது தான் இந்த வசனம்.
கைவிடப்பட்ட சபையின் மூலம், இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையையும், சுவிசேஷத்தையும் கேட்டறிந்த ஜனங்கள், இப்பொழுது அவர்களிடம் உன் நேசர் எங்கே போய்விட்டார்? என்கிற கேள்வியை முன் வைக்கிறார்கள். நாங்களும் உங்களோடு சேர்ந்து அவரைத் தேடுவோம் என்பதாக அவர்களுடைய பதில் இருக்கிறது. அவரை எப்படியாவது தேடி பற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தான் உங்களோடு கூட நாங்களும் தேடுகிறோம் என்கிறார்கள். இதிலிருந்து ஒரு செய்தியை நன்றாக அறிந்துக் கொள்ளலாம்;. அது என்னவென்றால், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷம் எப்படிப்பட்ட மனிதர்களையும், சமுதாயத்தையும் மாற்றும். ஏசா 55 : 11-ல் கர்த்தர் சொல்லுகிறதாவது, என் வாயிலிருந்து புறப்படும் வசனம் வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அவர் செய்ய நினைத்தக் காரியத்தை செய்து முடிக்கும் என்பதாக கூறுகிறார். அதேபோல், இன்று நாமும் இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தையும், அவருடைய வசனத்தையும் அறிவிக்கும் போது ஜனங்களின் ஆத்துமாவில் மாற்றம் உண்டாகும்.
அவரைத் தேடி கண்டுபிடிக்க முடியாது என்பதை கைவிடப்பட்ட சபை அறிந்துக்கொண்டது (ஏசா 55 : 6). ஆனால் ஜனங்களுக்கு அது தெரியாது, அதனால் அவர்கள் "நாங்களும் உங்களோடு சேர்ந்து அவரைத் தேடுவோம்” என்று இப்படிக் கூறுகின்றார்கள்.
கிறிஸ்துவின் சுவிசேஷம் உங்களுக்குள் மாற்றத்தை உண்டுபண்ணுகிறதா?
குறிப்பு வசனம்: ரூத் 1: 16,ஏசா 2: 5,சகரி 8: 21, 22,யோவா6 :24