"அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது ; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.”
இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தை இனிப்பாக இருக்கிறது. மேலும் கைவிடப்பட்ட சபை இயேசு கிறிஸ்துவினுடைய அழகை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு எல்லாவற்றையும் கூறி, அவரை முற்றிலும் பரிபூரண அழகுள்ளவர் என்றும், அவரே என் நேசர் என்றும், சிநேகிதர் என்றும் சாட்சி கூறுகிறதை பார்க்க முடிகிறது. அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; வாய் என்பது வாயிலிருந்து பிறக்கும் வார்த்தையை குறிக்கும். அதுதான் வேதம். இவ்வாறு கிறிஸ்துவினுடைய வாயிலிருந்து பிறக்கும் வார்த்தை, சபைக்கு இனிமையாக இருக்கிறது (சங் 119:103) என்று கைவிடப்பட்ட சபை சாட்சி கூறுகிறது.
அவர் முற்றிலும் அழகுள்ளவர். தேவன் தனது சாயலில் படைத்த மனிதனை மிக அழகுள்ளவர்கள் என்று வேதம் அனேக இடங்களில் கூறுகிறது. சிருஷ்டிப்பே ,வ்வளவு அழகு என்றால் சிருஷ்டிகரின் அழகு மனிதனின் அறிவுக்கெட்டாத காரியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து முற்றிலும் சரியானவர். அவர் தனது தெய்வத்துவத்தில் சரியானவர், அவரது மனிதாபிமானத்தில் சரியானவர், அவருடைய தியாகத்தில் சரியானவர், அவரது நேரத்தில் சரியானவர், அவருடைய முழு முழுமையிலும் பரிபூரணமானவர், அவர் மகிமை பொருந்தியவர், அவர் பரிசுத்தர், அவர் நீதியுள்ளவர், அவர் இரட்சகர், ஏனென்றால் அவரிடத்தில் தெய்வீகத்தின் முழுத்தன்மையும் வாசம் செய்கிறது மற்றும் அவரிடத்தில் முழு சந்தோஷமும் சமாதானமும் இருக்கிறது. ஏனென்றால் அவரே எல்லாவற்றையும் எல்லா வகையிலும் நிரப்புகிறார். (ரோமர் 11 : 36)
"இவரே என் நேசர் எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்” இவ்வளவு சிறப்புகள் உள்ள இயேசு கிறிஸ்துவை கைவிடப்பட்ட சபை "இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்" என்று விளக்கிச் சொல்லுகிறது.
இயேசு கிறிஸ்துவைப் போல் மாற்றப்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளதா?
குறிப்பு வசனம்: எரேமி 15: 16, வெளி 22:16, எபிரே 1:3