ஜனங்கள்; கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களை பார்த்து கேட்பது
"ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?”
இஸ்ரவேலர்கள்; இயேசு கிறிஸ்துவை ஒரு தீர்க்கதரிசியாகத்தான் அன்றைய நாட்களில் பார்த்தார்கள். மத் 16 : 13-16 -ல் இயேசு கிறிஸ்துவே தனது சீஷர்களிடம் ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்ற கேள்வியைக் கேட்கிறார். அதற்கு சிலர் யோவான்ஸ்நானன், எலியா மற்றும் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று சொல்லுகிறார்கள் என்று சீஷர்கள் கூறுகிறார்கள். எனவே இஸ்ரவேலர்களுக்குள் இந்த கேள்வி எழும்புகிறது.
"மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?” அதாவது எங்களுக்கு ஆபிரகாம், மோசே, தாவீது இன்னும் அநேக தீர்க்கதரிசிகள் உண்டு இவர்களைக் காட்டிலும் நீ தேடுகிற இயேசுகிறிஸ்து எதினால் விசேஷித்தவர் என்று கூற முடியுமா?என்கிறார்கள். அவரைக் காணாத பொழுதும் இவ்வளவு வாஞ்சையோடு தேடிக் கொண்டிருக்கிறாயே, நாங்கள் காணாத ஒருவரை நீ தேடி அலைகிறாய் எங்களிடமும் அவரைப்பற்றி வினவுகிறாய், அப்படி அவர் எதினால் விசேஷித்தவர்? நாங்கள் அறிந்து கொள்ள முடியுமா? என்பதாக இஸ்ரவேலர்கள் ஆச்சரியமாகவும், ஆவலுடனும் மறுமொழியாக கைவிடப்பட்ட சபையைப் பார்த்து தாங்கள் அறிந்துகொள்ளும்படி கேட்கிற கேள்விதான் இது.
உங்களுக்குள் கிறிஸ்து இரட்சகர் என்ற நிச்சயம் இருக்கிறதா?
குறிப்பு வசனம் : ஏசா 53: 2, மத் 16: 13-16, மத் 21: 10, யோவான் 1: 13-15, 46 யோவான் 7: 41-43, 2கொரி 4: 5-6, யோவான் 10:24
இயேசு கிறிஸ்துவின் அழகும் , சிறப்பும் வர்ணிக்கப்படுகிறது.
உன் 5 : 10-16- வரை உள்ள வசனங்கள் இயேசு கிறிஸ்துவின் அழகையும், அவர் சிறப்பையும் நமக்கு விளக்கிக் காட்டுகிறது . இந்த வசனங்கள் வெளி 1 : 14-16-ல் வருகிற தீர்க்கதரிசன வசனத்தின் வெளிப்பாட்டு வசனம் ஆகும்.