"எருசலேமின் குமாரத்திகளே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.”
கைவிடப்பட்ட சபை உதவிக்காக ஒரு தீவிர முயற்சியில் திரும்புகிறார்கள். "எருசலேமின் குமாரத்திகளே!" என்பது பழைய ஏற்பாட்டில் யூதர்களை குறிக்கும். புதிய ஏற்பாட்டில் எல்லா கிறிஸ்தவர்களையும் குறிக்கும். கைவிடப்பட்ட சபை, சோகம் அடைந்திருப்பதாக தன்னுடைய நிலைமையை ,இங்கே வெளிக்காட்டுகிறார்கள். அதாவது நெகேமியா தன்னுடைய ஜனங்களின் பரிதாப நிலையை அறிந்து சோகம் அடைந்து ராஜாவின் முன்பு நிற்பதைப் போல (நெகேமி 2 : 2,3) இங்கே கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களும், பரிதாபமான ஒரு நிலைமையிலே சோகம் அடைந்து உதவி கேட்டு நிற்கிறார்கள். அதாவது இயேசு கிறிஸ்துவின் அன்பை இழந்த சோகம், அந்த தெய்வீக அன்பு கிடைக்க முடியாமல் தவித்து வருகின்ற ஒரு சோகம், நம் வாழ்க்கையில் இந்த அன்பை நாம் பெறவே மாட்டோமா? என்ற அங்கலாய்ப்பினால் வருகிற சோகம் இவைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த சூழலுக்கு தப்ப இன்றே கிறிஸ்துவை கிட்டிச் சேருங்கள்
குறிப்பு வசனம் : சங் 118: 8, ஏசா 2: 22, ஏசா 5:8