Sermons

உன்னதப்பாட்டு 5 : 7

"நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.”

இது  அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி காலத்தில்  நடப்பவை. "நகரத்தில் திரிகிற காவலாளர்”  என்பது அந்திக்கிறிஸ்துவின் ஆட்களைக் குறிக்கும். முத்திரைப் போடாத கிறிஸ்தவர்களைக் கண்டால் அந்திக்கிறிஸ்துவின் இராணுவம் அவர்களை அடித்து சித்திரவதைப் படுத்துவதை இந்த வசனம் குறிப்பிடுகிறது. வெளி 13 : 7 இல் "பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.” என்று வேதவசனம் கூறுகிறது. மேலும் லூக்கா 12:45 - 48 இல் "தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்” என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அந்த நேரத்தில், அலங்கத்தின் காவற்காரர் சபையின் போர்வையை எடுத்துக்கொள்கிறார்கள். இங்கே "போர்வை” என்பது வஸ்திரத்தைக் குறிப்பதோடு, சபையின் ஒரு அடையாளத்தையும், மதிப்பையும் குறிப்பிடுகிறது. எசே 23 : 26, 16: 39 ,ல் "அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள்.” என்று குறிப்பிடுகிறது போல, இங்கே சபையின் அடையாளம் அந்திக்கிறிஸ்துவின்  இராணுவத்தால் பறித்துக்கொள்ளப்படும்.

கர்த்தரை விட்டுப் பின் வாங்கிப்போன ஜனங்கள், எதிரிகளிடம் ஒப்பு கொடுக்கப்பட்டனர். ங்கே வர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தும், இயேசு கிறிஸ்துவிடம் சரியான ஐக்கியம் இல்லாமல் வருகையிலே கைவிடப்பட்டதால், எதிரியாகிய அந்திக்கிறிஸ்துவின் காவலாளர்களிடம் ஒப்புக் கொடுக்கப்படுவார்கள். கிருபையின் காலம் வரைக்கும் சபைக்கு ஒரு அடையாளமும், மதிப்பும் இருக்கும். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை உடையவர்கள்; தேவ சித்தம் இல்லாமல் ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது; ஆனால் அந்திக்கிறிஸ்துவின் காலத்தில கிறிஸ்துவை உடையவர்கள் என்ற அடையாளம் போய், பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையை இவர்கள் உணர்கிறார்கள். ஆகையால், இந்த சூழலை எதிர் கொள்ளாமலிருக்க, மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது.

இந்த சூழல் உங்களுக்கு  வராது என்ற நிச்சயம் இருக்கிறதா?

குறிப்பு வசனம் :  ஓசியா 9: 7,8,  உன் 3: 3,    எசேக் 26: 6

Loading...