Sermons

உன்னதப்பாட்டு 4 : 6

"பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போள மலையிலும் சாம்பிராணி மலையிலும் போயிருப்பேன்.”

இயேசு கிறிஸ்து தன்னுடைய மணவாட்டி சபையோடு அவர் உலாவுவதையும், பேசுவதையும் குறிக்கிறது.

"பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்” - என்பது மாலை நேரத்தைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட வேளையில் தான் கர்த்தர் ஆதாம் - ஏவாளோடு பேசினதை ஆதி 3 : 8 ல் பார்க்கிறோம். பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அதேபோல் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

"நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன்”  என்று சொல்லப்படுவது என்னவென்றால் பரலோக எருசலேம் மற்றும் பரலோக சீயோனை குறிக்கிறது. எப்படியெனில்,

யாத் 30 :  34-36 -ல் வெள்ளைப்போளம் மற்றும் சாம்பிராணி பரிசுத்தத்தை குறிக்கிறது. பரிசுத்த மலை (பர்வதம்) என்பது சீயோன் மலையைக் குறிக்கிறது (சக 8: 3, யோவேல் 3 : 17), சீயோன் பர்வதம் பரலோக எருசலேமையும் மற்றும் கர்த்தரின் நித்திய நகரத்தையும் உருவகமாக குறிக்கிறது (எபி 12 : 22-23, வெளி 14 : 1).

ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது பரலோக ராஜ்ஜியத்தில் கிறிஸ்து இருந்தாலும், இன்று நமது இருதயங்களிலும் வாசம் செய்கிறார். இயேசு கிறிஸ்து மத் 12 : 28 -ல் தேவனுடைய ராஜ்ஜியம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே என்று கூறுகிறார்.

அன்பானவர்களே! இன்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது ஜனங்களோடு உலாவுகிறவராகவும், பேசுகிறவராகவும் இருக்கிறார். அதே வேளையில் பரலோகத்தில் பிதாவினிடத்தில் நமக்காக பரிந்து பேசுகிறவராகவும் இருக்கிறார் என்பதை இவ்வசனம் தெளிவாக தெரிவிக்கிறது.

உங்களோடு  இயேசு கிறிஸ்து பேசுவதையும், உலாவுவதையும் உணர்கிறீர்களா?

குறிப்பு வசனம் :  சங் 76: 2,ஆதி 3: 8,சங் 9: 11, யோவேல் 3: 17 வெளி 21: 10

Loading...